Indian Railway News: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது இந்தியன் ரயில்வே. இந்தியாவில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் என தொலைதூரம் செல்பவர்கள் அனைவரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர்.
மேலும், குறைவான கட்டணம், கழிவறை, படுக்கை வசதி இருப்பதால், பயணிகள் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால், ரயில்களில் பயணிப்பவர்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, ரயில்களில் சில பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதாவது, ரயில்களில் பயணம் செய்பவர்கள் 8 பொருட்களை கட்டாயம் எடுத்து செல்ல தடை செய்யப்படுகிறது. அது என்னென்ன பெருட்கள் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியன் ரயில்களில் பயணம் செய்யும்போது, உலர்ந்த தேங்காயை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேங்காய் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில்களில் பயணணம் செய்யும்பாது, தேங்ககாய் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. மீறினால், அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும். ரயில்களில் அதிகப்படியான தேங்காய் எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
ரயில்களில் கேஸ் சிலிண்டர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டரை ரயில்களில் எடுத்து செல்லவது எளிதகா தீப்பற்றக்கூடியது. இதனால், ரயில்களில் கேஸ் சிலிண்டர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. ரயில்களில் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த விதியை மீறினால் இந்திய ரயில்வே சட்டத்தின்படி ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ரயில்களில் பயணிக்கும்போது பட்டாசுகள், வெடி மருந்து எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. இவை இரண்டு எளிதாக தீப்பற்றக்கூடியது என்பதால், ரயில்களில் பட்டாசுகள், வெடி மருந்து எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. ரயில்களில் பட்டாசுகள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இந்த விதியை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 விதிக்கப்படலாம்.
அமிலங்கள் மற்றும் ரசாயணங்களைர ரயில்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், டாய்லெட் கிளீனர் அல்லது தோலில் தீக்காயம் ஏற்படுத்தக்கூடியது, மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் இதுபோன்ற ரசாயனங்களை ரயிலில் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சட்டத்தின்படி (Railways Act, 1989) ரயில்களில் அமிலங்கள் மற்றும் ரசாயணங்கள் எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
ரயில்களில் பயணம் செய்யும்போது, டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது ஆபத்தானது. இதனால், ரயில்களில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. ரயில்வே சட்டப் பிரிவு 164 மற்றும் 165-ன் படி, குறைந்தபட்சம் ரூ. 10,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
ரயில்களில் பயணம் செய்யும்போது, தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், தீக்குச்சிகளையும் அடுப்புகளையும் ரயிலில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
ரயில்களில் பயணம் செய்யும்போது, நெய் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. 20 கிலோ வரை நெய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதை ஒரு தகரப் பெட்டியில் முறையாகப் பொதி செய்ய வேண்டும். ஆனால், அதற்கு மேல் நெய் எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படலாம்.
ரயில்களில் பயணம் செய்யும்போது கெட்டுப்போன பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்படுகிறது. கெட்டுப்போன உணவு எடுத்து செல்வது பயணிகளுககு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.