• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்! குறைந்த செலவில் காசி டூர்.. மிஸ் பண்ணாதீங்க

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்! குறைந்த செலவில் காசி டூர்.. மிஸ் பண்ணாதீங்க

IRCTC Kashi Tour Package: ஐஆர்சிடிசி குறைந்த செலவில் காசிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது. கயா, வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு திருநெல்வேலியில் இருந்து சுற்றுலா அழைத்து செல்கிறது. இதற்கு எப்படி டிக்கெட் புக் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Written ByUmabarkavi K
Published: Aug 09, 2026, 09:28 AM IST|Updated: Aug 09, 2026, 09:32 AM IST
joinshare
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்! குறைந்த செலவில் காசி டூர்.. மிஸ் பண்ணாதீங்க

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

2

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

3

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

4

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

5

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IRCTC Kashi Tour Package: இந்துகளின் புனித யாத்திரை தலமாக காசி (வாரணசாசி) இருக்கிறார். இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காசிக்கு செல்ல விருப்பபடுவார்கள். அங்கு பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஜோதி லிங்கத்தை தரிசிப்பது புன்னியாக கருதப்படுகிறது. ஆனால், இங்கு எல்லாராலும் செல்ல முடிவதில்லை. இதற்காக தான், ஐஆர்சிடிசி குறைந்த செலவில் காசிக்கு சுற்றுலா அழைத்து செல்கிறது.

குறைந்த செலவில் காசி சுற்றுலா

ஐஆர்சிடிசி திருநெல்வேலியில் இருந்து காசிக்கு ரயிலில் சுற்றுலா அழைத்து செல்கிறது. இந்த சுற்றுலா தொகுப்பில் செப்டம்பர் 9ஆம் தேத துவங்குகிறது. 8 இரவுகள், 9 நாட்களை உள்ளடக்கியது. கயா, வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களுக்கு செல்வீர்கள். செப்டம்ர் 9ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை விஜயவாடா சென்றடைவீர்கள்.

அங்கிருந்து உள்ளூர் வாகனம் மூலம் கயாவுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். அங்கு ஒரு ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை நேரத்தில் கயா-மகாபோதி கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்வீர்கள்.

தொடர்ந்து நான்காவது நாள், காலை உணவிற்குப் பிறகு பிண்ட தன் / தர்ப்பணத்திற்காக விஷ்ணு பாத கோவிலுக்குச் செல்வீர்கள்.  மதியம் வாரணாசிக்கு புறப்பட்டு, இரவில் அங்கு சென்றடைவீர்கள். ஐந்தாம் நாள் காலை வாரணாசியில் காசி விஸ்வநாகர் கோயில், அன்னபூரணி கோயில், காசி விசாலாக்ஷி கோயில், காலபைரவர் கோயிலில் தரிசனம் மேற்கொள்வீர்கள். மாலையில் கங்கா ஆரத்தியில் கலந்துகொள்வீர்கள்.

6ம் நாள் அயோத்திக்கு கப்பலில் அதிகாலையில் செல்வீர்கள். நாள் முழுவதும் அயோத்தியைச் சுற்றி பார்த்துவிட்டு, இரவில் பிரயாக்ராஜுக்கு புறப்படுவீர்கள். 7ம் நாள் காலையில் பிரயாக்ராஜுல் அனுமன் கோவிலில் தரிசனம் செய்து நீராடுவதற்காக சங்கமத்திற்குப் செல்வீர்கள். 

இரவில் அங்கிருந்து புறப்பட்டு விஜயவாடா செல்வீர்கள். செப்டம்பர் 16ஆம் தேதி புறப்படும் இந்த பயணம் செப்டம்பர் 17ஆம் தேதி திருநெல்வேலிக்கு வந்தடைவீர்கள். காசி ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்ல்பட்டு, தாம்பரம், எழும்பூர், குடூர், விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கட்டணம், சலுகைகள் என்ன?

ஐஆர்சிடிசியின் காசி சுற்றுலாவுக்கு கட்டணமாக  சாதாரண ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.16,900, 3ம் வகுப்பு ஏசி வகுப்பிற்கு ரூ.31,000, 2ம் வகுப்பு ஏசி பெட்டிற்கு ரூ.43,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இந்த சுற்றுலா பேக்கேஜில் ஏசி, சாதாரண அறைகள் கிடைக்கும். உங்கள் கட்டணத்தை பொறுத்து இது மாறுபடும். மேலும், உள்ளூர் வாகனம், காலையில் டீ, உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளை உணவும் வழங்கப்படும். சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். 

மேலும், டிராவல் இன்சூரன்ஸ், ஜிஎஸ்டி அனைத்தும் இதில் அடங்கும். கோயில்களில் உங்கள் நுழைவு கட்டணத்தை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐஆர்சிடிசியின் காசி சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways