SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இனி டிவிலையும் ரீல்ஸ் பாக்கலாம்! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..மெட்டா அறிவிப்பு

இந்தியா உள்பட, உலகளவில் பல கோடிபேர் பயன்படுத்தும் சமூக வலைதளமாக இருக்கிறது, இன்ஸ்டாகிராம். இந்த தளத்தை இனி டிவியிலும் பார்க்கலாம் என இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல், இதோ.

Written By Yuvashree M
Published: Nov 28, 2026, 15:44 IST | Updated: Nov 28, 2026, 15:52 IST
Image Credit: Insta TV | X Page
Join

இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கி களைத்து போன பல பேர் நம் மத்தியில் இருப்பார்கள், அல்லது அவர்களுள் நாம் ஒருவராக இருப்போம். செல்போன், லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் தற்போது இன்ஸ்டாவை உபயோக்கும் வசதி இருக்கிறது. தற்போது, அதையும் தாண்டி டிவியிலும் இன்ஸ்டா உபயோகிக்கும் வசதியை மெட்டா கொண்டு வர இருக்கிறது.

மெட்டாவின் புதிய அறிவிப்பு..!

மெட்டா நிறுவனம், கடந்த வெள்ளியன்று, இன்ஸ்டாகிராம் தளம் டிவியிலும் உபயோகிக்கும் வசதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்திருக்கிறது. அதாவது, இந்த வசதியின் மூலம் இன்ஸ்டாவில் வரும் சிறிய ரக காணொளிகளை, டிவி திரை வழியாக காண முடியும். ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவையும் இதில் அடக்கம்.

மேலும் படிக்க | ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

மெட்டாவின் சமீபத்திய வருடாந்திர நிகழ்வு, மும்பையில் நடந்தது. அப்போது, இது குறித்து நிறுவனம் சார்பில் பேசிய அதிகாரிகள், தங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களின் கண்டெண்ட்களை பெரிய திரையில் பார்க்க இந்த தளம் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாவிஅ பயன்படுத்துபவர்கள், ஒரு வீடியோவை ஒன்றாக பார்ப்பது, அதை மொபைலில் தனியாக பார்ப்பதை விட நன்றாக இருக்கும் என கூறியதன் விளைவாக இப்படியொரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

”இன்ஸ்டா பயனாளிகளிடமிருந்து, தங்களுக்கு மிகவும் பிடித்த கிரியேட்டர்களின் கண்டெண்ட்களை ஒன்றாக பார்க்கும் அனுபவம் நன்றாக இருப்பதாக கருத்துகள் வந்தது, அந்த அனுபவத்தை, இந்த புதிய திட்டம் பயனாளர்களுக்கு இது வழங்கும்” என மெட்டா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எந்த தொலைக்காட்சிகளில் வரும்..?

எடுத்தவுடன், அனைத்து டிவி திரைகளிலும் இன்ஸ்டாவை அளிக்க மெட்டா முன்வரவில்லை. ஆப்பிள் டிவி, அமேசான் ஃபயர் டிவி, கூகுள் டிவி சாதனங்கள் உள்ளிட்டவற்றில் இன்ஸ்டாகிராம் பார்க்கலாம். இந்த செயலி, இன்னும் சில நாட்களில் டிவியில் வந்து விடும் என பொருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

”இன்ஸ்டாகிராம் டிவி என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒரு அம்சமாகும். நண்பர்களும், குடும்பங்களும் ஒன்றாக அமர்ந்து, ரிமோட்டை மாற்றி, ரெக்கமண்டேஷன்ஸை மாற்றி இன்ஸ்டா பார்க்கலாம்” என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

டிவியில் எப்படி இன்ஸ்டா பார்ப்பது..?

பயனாளர்கள், தங்களது தொலைக்காட்சியில் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், உங்கள் கணக்கு விவரங்களை பதிவிட்டு உள்நுழையலாம். அல்லது, புதிய கணக்கையும் திறக்கலாம்.

இன்ஸ்டாகிராம் மொபைல் செயலியில் உள்ள 'அமைப்புகள்' புக்மார்க் வழியாக நேரடியாக தொலைக்காட்சி அனுபவத்தைத் திறப்பதற்கான விருப்பமும் இருக்கும்.

எத்தனை கணக்குகளை சேர்க்க முடியும்..?

மொபைலில் நாம் உபயோகிக்கும் இன்ஸ்டாகிராமில் கூட, 1க்கும் மேற்பட்ட கணக்குகளை சேர்த்துக்கொள்ளலாம். தொலைக்காட்சியிலும் அதே அம்சம்தான்.  அதில், 5 கணக்குகள் வரை சேர்த்துக்கொள்ளலாம் என் இன்ஸ்டா கூறியுள்ளது.

இதனால், வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய அக்கவுண்டை தனித்தனியாக மெயிண்டெயின் செய்ய முடியும்.

இந்தியாவை பொருத்தவர, ரீல்ஸ் மற்றும் ஸ்டோரீஸ் ஆகியவை, கிடைமட்ட வடிவம் (horizontal) வடிவில் இருக்கின்றன. இவை, பெரிய ஸ்க்ரீனில் தெரியும் என மெட்டா அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே போல, தொடர்ந்து வரும் போட்டோக்களான “Carousels Photo”வையும் தேடிப்பார்க்கும் வசதியும் இதில் கொண்டு வரப்படலாம்.

மொபைலில், ரீல்ஸை ஒவ்வொன்றாக நாம் பார்த்து முடித்த பின்பு தள்ள வேண்டும். ஆனால், டிவியில் அப்படியல்ல ஒரு வீடியோ முடிந்தவுடன் அதுவே இன்னொரு வீடியோவிற்கு மாறிவிடும்.

மேலும் படிக்க | Gratuity கணக்கீடு: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.40,000 சம்பளம்... கிராச்சுவிட்டி எவ்வளவு கிடைக்கும்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES