SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : அச்சுறுத்தும் 80s ட்ரெண்ட்..பல லிட்டர் தண்ணீர் காலி! 10 வருடத்தில் என்ன ஆகுமோ?

இன்ஸ்டாகிராமில் 80ஸ் ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் பல பேர் தங்கள் புகைப்படங்களை கிரியேட் செய்து வருகின்றனர்.

Written By Yuvashree M
Published: Sep 10, 2026, 05:36 PM IST | Updated: Sep 10, 2026, 05:43 PM IST
Image Credit: AI Dangerous Trend | X Page
Join

இணையதளத்தில் அடிக்கடி, ஏதேனும் ஒரு ஏஐ ட்ரெண்ட் வலம் வருவது தொடர்கதையாகி வருகிறது. அப்படி, சமீபத்தில் இன்ஸ்டாவை ஆக்கிரமித்திருப்பதுதான், இந்த 80s ட்ரெண்ட். இணையவாசிகள் பல பேர், தங்களின் போட்டோக்களை AIயிடம் கொடுத்து, ‘நான் 80sல் எப்படி இருப்பேன் என கிரியேட் செய்து கொடு’ என ஆங்கிலத்தில் prompt கொடுக்க, AIம் கிரியேட் செய்து தருகிறது. இதை, இணையத்தில் பலரும் பதிவேற்றி வருகின்றனர். இது, பார்ப்பதற்கு funஆக இருந்தாலும், இதற்கு பின்னால் இருக்கும் ஒரு பெரும் பிரச்சனையும் இருக்கிறது.

GPU மெல்ட் ஆகிறது!

ஏஐ-யிடம் எதை கேட்டாலும், அது நமக்கு உடனடியாக பதில் கொடுக்க பல லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதாக  Open AI தலைமை செயலாளர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருந்தார். அதோடு, இதனால் அவர், ChatGPT பயணாளர்கள் அதனிடம் பேசும் போது அதனிடம் Please, Thank You உள்ளிட்டவற்றை சொல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். காரணம், அப்படி சிம்பிளான ஒரு விஷயத்திற்கு ரிப்ளை செய்வதற்கு கூட, OpenAI பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான மின்சாரம் மற்றும் கம்ப்யூட்டிங் பவர் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

தற்போது அவரேதான், பலரும் 80s ட்ரெண்ட் போட்டோக்களை உருவாக்குவதால், அவர்களின் Graphics Processing Units எனப்படும் GPU மிகவும் சூடாவதாக கூறியிருக்கிறார். இதனால், GPU உருகுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதை கூல் செய்வதற்காக, டேட்டா செண்டர்கள் பல லட்சம் கணக்கிலான குடிநீரை உபயோகிக்கிறது. இதனால், அரிசோனா மற்றும் யூட்டா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே வறட்சியில் இருக்கின்றன.

இந்த 80s ட்ரெண்டில், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட சுமார் 34 மில்லியன் AI போட்டோக்கள் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்க, ஒலிம்பிக்கில் உபயோகப்படும் ஸ்விம்மிங் பூலின் அளவில் 200 ஸ்விம்மிங் பூல்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

1 AI இமேஜை உருவாக்க - 0.04 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

1 மில்லியன் போட்டோகளை இது போல உருவாக்க - 40,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இது, கிட்டத்தட்ட 20,000 பேருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் தண்ணீராக இருப்பதாக கூறப்படுகிறது.

2030ல் என்ன நடக்கும்?

டேட்டா செண்டர்கள், பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உபயோகிப்பதோடு, எண்ணிலடங்காத அளவிற்கு மின்சாரத்தையும் உரிஞ்சுகின்றன. 80s ட்ரெண்ட் போல, நிலைமை இப்படியே சென்றால், 2030க்குள் பெரும் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பெருநகரங்களாக இருக்கும் மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே டேட்டா செண்டர்கள் அமைந்திருக்கின்றன. இதனால், இந்த டேட்டா செண்டர்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீக்கிரமாக குடிநீர் பற்றாக்குறை வந்து விடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. சென்னையிலும் மும்பையிலும் இருக்கும் டேட்டா செண்டர்கள், அதிகமான மின்சாரம் மற்றும் தண்ணீரை உபயோகித்து வருவதாகவும், இதன் தாக்கம் உலகளாவியதாக இருக்கும் என்பதும் பல ஆய்வாளர்களின் கலவையாக இருக்கிறது.

அப்போதே வந்த வார்னிங்:

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ஒருமுறை, “AI-ஆல்அதிகரித்து வரும் நீர் தேவையானது, காலநிலை இலக்குகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்று எச்சரித்தது.

80ஸ் ட்ரெண்டும், ஜிபிலி ட்ரெண்ட் போல சீக்கிரமே டாட்டா சொல்லிவிட்டு கிளம்பி விடும். இதே இடத்திற்கு இன்னொரு புதிய ட்ரெண்டும் வந்து விடும். இதில் இணைந்து, நாமும் போட்டோக்களை பதிவிடுவதால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ஆனால், இதற்காக சுற்றுச்சூழல் அமைப்பை நாம் சீர்குலைக்க வேண்டுமா என்பதை மக்கள் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Explainer : உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் Deep Fakes! எதை நம்புவது? எதை நம்பக்கூடாது?

வேலை இழப்பு வரலாம்!

AI முதலில் தலைத்தூக்க ஆரம்பித்த போது, அனைவரும் பயந்த ஒரு விஷயம், AIஆல் அனைவருக்கும் வேலை போகும் என்பதுதான். இதை, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டாரியோ அமோடி எச்சரிக்கையாகவே விடுத்திருந்தார். AI தொழில்நுட்பம் மனித அறிவாற்றலை பிரதிபலிக்கும் வகையில் வளர்ந்து வருவதால், வரும் காலங்களில் உலக அளவில் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவித்திருந்தர். மேலும், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய காப்பீடு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் அரசின் கொள்கை மாற்றங்கள் மூலமே பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்.

"AI நம்மை கொன்று விடும்!”

சமீபத்தில், ஜேக்கப் காக்ஸன் எனும் ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் பணியாளர், தன் வேலையை ராஜிநாமா செய்திருக்கிறார். அப்படி அவர் ராஜிநாமா செய்யும் போது மக்களுக்கு ஒரு வார்னிங்கையும் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். குறிப்பாக, AIன் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் டெக்னாலஜி, மனிதர்களையே அழித்து, பல தசாப்தங்களை மாற்றலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.

தாங்கள் 3 வருடமாக ஒரு AI மாடலை ட்ரெயின் செய்து வருவதாகவும், அவர்கள் இதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு, ப்ரைவேட்டில் பயந்ததை பார்த்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு, எந்த ஏஐ நிறுவனங்களும் பொறுப்பு எடுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். AI-ஐ அதிநுண்ணறிவாக உருவாக்க, அவர்கள் மக்களின் வாழ்வை பனயம் வைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதையெல்லாம் கேட்கும் போது, நம்மையே அறியாமல் ஹாலிவுட் படமான ‘டெர்மினேட்டர்’ போல உண்மையாக ஏதாவது கிளம்பி விடுமோ என்கிற பயம் தொற்றிக்கொள்கிறது. இதை மக்கள் அனைவரும் அறிந்து, ஏஐ எனும் பவர்ஃபுல்லான கருவியை சரியாக கையாள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Explainer: இந்தியாவின் முதல் AI நகரம் 'அறிவகம்' - இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES