• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /தமிழ்நாட்டு மீன்களில் கலந்திருக்கும் ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட்.. மக்களே கவனம்!

தமிழ்நாட்டு மீன்களில் கலந்திருக்கும் ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட்.. மக்களே கவனம்!

தமிழகத்தின் நான்கு கடற்கரைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் முக்கியமான மீன் வகைகளில் ஈயம் (Lead), துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper) மற்றும் இரும்பு (Iron) போன்ற உலோகங்களின் அளவு ஆபத்தான முறையில் அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையின் காசிமேடு பகுதியில் பிடிக்கப்படும் மீன்களில்தான் துத்தநாகம் மற்றும் ஈயத்தின் அளவு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 17, 2026, 14:43 IST|Updated: Nov 17, 2026, 15:09 IST
joinshare
தமிழ்நாட்டு மீன்களில் கலந்திருக்கும் ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட்.. மக்களே கவனம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Heavy Mentals In TN Fish Explained: தமிழகத்தில் நான்கு கடற்கரைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் முக்கியமான மீன் வகைகளில் ஈயம், காப்பர், இரும்பு, துத்தநாகம்  போன்ற உலோகங்களின் அளவு அதிகமாக இருப்பது  கண்டறியப்பட்டது. இதில் சென்னை காசிமேடு பகுதியில் பிடிக்கப்படும் மீன்களில் தான் ஈயம், துத்தநாதத்தின் அளவு மிக அதிகமகா  இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.  இதனை மக்கள் சாப்பிடுவது எந்தளவுக்கு ஆபத்தை  ஏற்படுத்தும் என என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை மீன் விற்பனை

தலைநகர் சென்னை, தனது தனித்துவமாக கடல் உணவு கலாச்சாரத்திற்கும், மீன்பிடித்  தொழிலுக்கும் பெயர் பெற்றது. சென்னையின் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தளங்களில்  முதன்மையான இடமாக காசிமேடு மீன்பிடித் துறைமுகம் இருக்கிறது. பூண்டிருக்கும். ஆழ்கடலுக்குச் சென்று திரும்பும் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளில் இருந்து கூடை கூடையாகக் கொட்டப்படும் வஞ்சிரம், சங்கரா, வவ்வால், இறால், நண்டு மற்றும் கணவாய் உள்ளிட்ட மீன் வகைகளை ஏலம் எடுக்கவும், வாங்கவும் மொத்த வியாபாரிகளும் சில்லறை வாடிக்கையாளர்களும் இங்கு அலைமோதுவார்கள்.

சென்னையில் காசிமேடு மட்டுமின்றி,  பட்டினம்பாக்கம் லூப் சாலை நகர மக்களின் விருப்பமான இடமாக உள்ளது. இங்கு மீனவர்கள் நேரடியாகக் கடலிலிருந்து பிடித்து வரும் புதிய மீன்களை உடனுக்குடன் விற்பனை செய்வதால், வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். இதேபோல், வட சென்னையில் எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளும், மத்திய சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையும் முக்கிய விற்பனை மையங்களாகச் செயல்படுகின்றன.  

மேலும், திருவான்மியூர், பெசன்ட் நகர், கோவளம், கொளத்தூர், வானகரம் ஆகிய இடங்கள் மீன் விற்பனை நிலையங்களாக இருக்கின்றன. இந்த மையங்கள் சென்னைவாசிகளின் அன்றாட புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, பல ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முதுகெலும்பாகவும் விளங்குகின்றன. இப்படியான நிலையில் தான்,  சென்னையில் விற்பனை செய்யப்படும், மீன்களில் ஈயம், காப்பர், இரும்பு, துத்தநாகம்  அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க: 'அக்வான்' புயல்.. மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறும்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம்?

மீன்களில் கலக்கப்படும் உலோகம்

தமிழகத்தின் நான்கு கடற்கரைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் முக்கியமான மீன் வகைகளில் ஈயம் (Lead), துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper) மற்றும் இரும்பு (Iron)போன்ற கனரக உலோகங்களின் அளவு ஆபத்தான முறையில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதில் சென்னையின் காசிமேடு பகுதியில் பிடிக்கப்படும் மீன்களில்தான் துத்தநாகம் மற்றும் ஈயத்தின் அளவு மிக அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.  இது டிஸ்கவர் என்விரான்மென்ட்' (Discover Environment) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு இந்த மீன்களைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் 'ஆபத்துக் குறியீடு' (Hazard Index - HI) இந்த நான்கு இடங்களிலும் 1-ஐ விட அதிகமாகவே பதிவாகியுள்ளது. HI 1க்கு அதிகமாக இருப்பதால் அந்த உணவில் நச்சுப் பொருட்களின் அளவு பாதுகாப்பான எல்லையைத் தாண்டிவிட்டது என்று அர்த்தம். இதைத் தொடர்ந்து நீண்ட நாட்களுககு சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.  

அதன்படி, தமிழகத்தில் நான்கு கடற்கரைப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் முக்கியமான மீன் வகைகளில் HI 1க்கு அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இதில் மல்லிப்பட்டினத்தில் அதிகபட்சமாக 3.48 என்ற குறியீடு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உப்பனாறு கடற்கரை மீன்களில் 2.50 என்ற குறியீடு, வேளாங்கண்ணி கடற்கரை மீன்களில் 2.21 என்ற குறியீடு, காசிமேட்டில் 1.91 என்ற குறியூடு உள்ளது.

மீன்களில் உலோகங்கள் கலப்பது ஏன்?

தொழிற்சாலை கழிவுகள், துறைமுக செயல்பாடுகள், படகு பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் ஆகியவை இநத மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என கண்டறியப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் கடல்சார் உயிரியல் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நான்கு இடங்களில் இருந்தும் 20 மீன்கள் சேரிக்கப்பட்டு, நான்கு வண்டல் மண் மாதிரிகளும பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் கானாங்கெளுத்தி, மத்தி மீன், வாவல் மீன், சங்கர மீன், நெத்திலி, சீலா மீன் ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டன.  

அமெரிக்க சுற்றுச்சூல் பாதுகாபப் முகமையின் வழிமுறைகளைப் பயன்படுத்தி இதற்கான ஆபத்து குறியீடு கணக்கிடப்பட்டது. சராசரியாக 55.9 கிலோ உடல் எடை கொண்ட ஒருவர், நாளொன்றுக்கு 57.5 கிராம் மீன் சாப்பிடுவதாக கணக்கிட்டு, இந்த அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குறியூடு 1க்கு மேல் இருப்பது நீண்ட காலத்திற்கு இந்த மீன்களைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆனால், இதுவே நோய்க்கான நேரடி ஆதாரமல்ல. மேலும், கணிக்கப்பட்டுள்ள இந்த உடல்நல அபாயத்திற்கு மீன்களில் உள்ள இரும்பு மற்றும் ஈயத்தின் அளவே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  

மேலும் படிக்க: திருச்செந்தூர் முருகனுடன் முதல்வரை சேர்த்து பாடிய விவகாரம்! புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்..

இந்த உலோகங்கள் எங்கிருந்து வருகின்றன?

ஈயம் (Lead): தொழிற்சாலைக் கழிவுகள், கப்பல் கட்டும் தளங்கள், படகு பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகள்.  

துத்தநாகம் (Zinc): படகுகளுக்கு அடிக்கப்படும் வண்ணங்கள், பாசி படியாமல் தடுக்கும் பூச்சுகள், துத்தநாகம் பூசப்பட்ட பொருட்களின் துருப்பிடித்தல் மற்றும் துறைமுகக் கழிவுநீர் ஓட்டம்.  

தாமிரம் (Copper): தொழிற்சாலைக் கழிவுகள், கரிமக் கழிவுகள் மக்குதல், பூச்சிக்கொல்லிகள், வண்ணங்கள் மற்றும் பாசித் தடுப்புப் பொருட்கள்.  

இரும்பு (Iron): தொழிற்சாலைக் கழிவுகள், படகு கட்டும் தளங்கள், சிறுதொழிற்சாலைகள் மற்றும் வீட்டுக் கழிவுநீர்

உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமை ஈயம் மனிதர்களுக்கு புற்றுநேயை உருவாக்கக் கூடிய ஒரு பொருளாக வகைப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈயத்தால் ஏற்படும் புற்றுநோய் அபாயம் குறித்து ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆய்வாளர் முதன்மை ஆய்வாளர் நவீன்குமார் மஹிதா கூறுகையில், "ஈயம் கலந்த மீன்களைத் தொடர்ந்து உட்கொள்வது, சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை பாதிக்கக் கூடிய புற்றுநோய்களின் அபாயத்தை  அதிகரிக்கும். எனினும், இந்த ஆய்வு புற்றுநோய் அபாயத்துக்கான துல்லியமான அளவைக் கணக்கிடவில்லை.  

காசிமேடுப் பகுதியில் துத்தநாகத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கு, படகுகளுக்கு அடிக்கப்படும் வண்ணங்கள், பாசிகள் படியாமல் தடுக்கும் பொருட்கள் மற்றும் துறைமுக கழிவு நீர் ஓட்டம் ஆகியவை காரணமாக கூறப்பட்டுள்ளது.   உப்பனாசுறு பகுதியில் வண்டல் மண்ணில் ஈயத்தின் அளவு அதிகமாக காணப்பட்டுள்ளது. இது சிப்காட் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் நகர்ப்புறக் கழிவுகளுடன் தொடர்புடையதகா இருக்கலாம். மல்லிப்பட்டினத்தில் மீன்களில் இரும்பு, தாமிரத்தின் அளவு அதிகமாக பதிவாகி உள்ளது.  இது தொழிற்சாலைக் கழிவுகள், படகு தளங்கள், கழிவுநீர் மற்றும் கரிமக் கழிவுகள் காரணமாக இருக்கலாம்.

ஈயம் மிகவும் ஆபத்தானது

இது தொடர்பாக இரைப்பை குடலியல் நிபுணர் மருத்துவர் பாண்டுரங்கள் பசுமணி கூறுகையில், ”இந்த உலோகங்களில் ஈயம்  தான் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஈயம் உடலுக்குள் சிறிதளவு கூட செல்லக் கூடாது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு, பெரியவர்களுக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.  ஈயப் பூச்சு கொண்ட பாத்திரத்தில் தினமும் கஞ்சி குடித்து வந்த ஒரு நோயாளிக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஈய நச்சுத்தன்மையைக் கண்டறிவது சற்று கடினம். இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவை குறைந்த அளவில் உடலுக்குத் தேவையானவை என்றாலும், அவை அளவுக்கு அதிகமாகும்போது உள் உறுப்புகளைப் பாதிக்கும்” என்றார். 

மேலும் படிக்க: Explainer: ஆதவ் அர்ஜுனா- டெய்சி மார்டின் பிரிவு... கத்தாமல் கதறாமல் ஒரு வித்தியாசமான விலகல், பின்னணி என்ன?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer