• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /நெசவாளர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு: விசைத்தறி நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்!

நெசவாளர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு: விசைத்தறி நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்!

Tamil Nadu Government : நெசவாளர்கள் விசைத்தறிகளை நவீனமயமாக்க 10 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 16, 2026, 10:21 AM IST|Updated: Aug 16, 2026, 10:31 AM IST
joinshare
நெசவாளர்களுக்கு அரசின் சூப்பர் அறிவிப்பு: விசைத்தறி நவீனமயமாக்க ரூ.10 லட்சம் மானியம்!
Image Credit: Tamil Nadu Powerloom Modernisation Scheme

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : தமிழ்நாட்டில் விசைத்தறி தொழிலில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு ‘விசைத்தறி நவீனமயமாக்கல் திட்டம்’ (Powerloom Modernisation Scheme) என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிகளை அதிநவீன நாடாவில்லா ரேப்பியர் தறிகளாக மாற்றவும், புதிய நவீன தறிகள் வாங்கவும் லட்சக்கணக்கில் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 3,000 விசைத்தறிகளை நவீனமயமாக்குவதற்காக ரூ.30 கோடியும், நெசவுத் தொழிலுக்கான பொது வசதி மையங்கள், தறிக்கூடங்கள் மற்றும் தரப்பரிசோதனை ஆய்வகங்களை அமைப்பதற்காக ரூ.20 கோடியும் என மொத்தமாக ரூ.50 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் உற்பத்தியாகும் துணிகளின் தரம் உயர்வதோடு, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை போட்டிகளை எதிர்கொள்ளும் திறனும் நெசவாளர்களுக்குக் கிடைக்கிறது.

பழைய சாதாரண விசைத்தறிகளை நாடாவில்லா ரேப்பியர் தறிகளாக மேம்படுத்துவதற்கு திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் அல்லது ஒரு தறிக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை மானியமாக வழங்கப்படும். இதில் எது குறைவோ அந்தத் தொகை பயனாளருக்குக் கிடைக்கும். விசைத்தறி தொழில் செய்யும் ஒரு தனிநபர் அதிகபட்சமாக 10 தறிகள் வரை நவீனப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானிய உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய ரேப்பியர் ரக நாடாவில்லா தறிகளை புதிதாகக் கொள்முதல் செய்வதற்கு திட்ட தொகையில் 20 சதவீதம் அல்லது ஒரு தறிக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு தனிநபர் அதிகபட்சமாக 5 புதிய தறிகள் வரை வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் புதிய தறிகள் வாங்க அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் வரை அரசு மானியம் பெற முடியும்.

விசைத்தறி நெசவிற்கு முந்தைய பணிகளை எளிதாக்க வார்ப்பிங் மற்றும் சைசிங் எந்திரங்கள், துணி தரப்பரிசோதனை ஆய்வகம், வடிவமைப்பு மையம் மற்றும் மாதிரி துணி உற்பத்தி மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொது வசதி மையம் அமைப்பதற்கும் அரசு நிதி வழங்குகிறது. இத்தகைய மையங்களை அமைக்க மொத்த திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை மானியமாகப் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தது 3 ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகள் இருக்க வேண்டும். பழைய தறிகளை நவீனமாக்க ரேப்பியர் கிட், எலக்ட்ரானிக் கலர் செலக்டர், வெஃப்ட் அக்குமுலேட்டர், வெஃப்ட் சென்சார், கியர் பாக்ஸ், பேனல் போர்டு மற்றும் டக்-இன் சாதனங்கள் போன்ற உபகரணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த உபகரணங்களை அரசு பட்டியலிட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே நெசவாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் நெசவாளர்கள்ர, தங்கள் மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குநர் அல்லது துணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes