SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TET 2026: ஆசிரியர்களுக்கு TRB-யின் முக்கிய சுற்றறிக்கை! பழைய பணிச்சான்றிதழ் செல்லாது

ஆசிரியர்களுக்கு TRB வெளியிட்டுள்ள முக்கிய சுற்றறிக்கையில் பழைய பணிச்சான்றிதழ் செல்லாது, என கூறி புதிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது

Written By Karthikeyan Sekar
Published: Nov 05, 2026, 06:57 AM IST | Updated: Nov 05, 2026, 07:00 AM IST
Join

தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - அக்டோபர் 2026 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணிச்சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மிக முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.  

தேர்வு எப்போது? யாருக்கெல்லாம் பொருந்தும்?

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர்ந்து, தற்போது தமிழகத்தின் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்காக இந்த இரண்டாம் கட்ட சிறப்புத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது வரும் 20.12.2026 அன்று நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தாள்-I பிற்பகலிலும், தாள்-II முற்பகலிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை : இந்த மாதம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

புதிய பணிச்சான்றிதழ் படிவம் கட்டாயம்:

இச்சிறப்புத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்காகப் புதிய பணிச்சான்றிதழ் படிவம் (Annexure-1) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அறிவிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களது சேவை விவரங்களை உறுதிப்படுத்த இந்த புதிய படிவத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிய படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித மாற்றங்களும் இன்றி முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், உரிய வழிகாட்டி அலுவலர்களிடம் (Competent Authority / Approving Officers) முறையான சான்றொப்பம் பெற்று, அந்த படிவத்தை மட்டுமே இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் (Upload) செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பழைய படிவத்தைப் பயன்படுத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!

சில ஆசிரியர்கள் முந்தைய முதற்கட்ட தேர்வின்போது பயன்படுத்திய பழைய பணிச்சான்றிதழ் படிவத்தையோ அல்லது புதிய படிவத்தில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தோ பதிவேற்ற வாய்ப்புள்ளது. அவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால், புதிய படிவத்தில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்துப் பதிவேற்றம் செய்தாலோ, முதற்கட்ட தேர்வின் (Special TNTET-1) பழைய படிவத்தைப் பதிவேற்றம் செய்தாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முற்றிலும் நிராகரிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு:

இது தொடர்பாகப் பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், தனியார் பள்ளிகள் இயக்ககம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு இந்த புதிய நடைமுறையை உடனடியாகத் தெரியப்படுத்தி, தகுதியான ஆசிரியர்கள் அனைவரும் புதிய படிவத்திலேயே பணிச்சான்றிதழ் பெற்று விண்ணப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியவை:

அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள Annexure-1 புதிய படிவத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  

தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளின் சான்றொப்பத்தை முறையாகப் பெற வேண்டும்.
 
கடைசி நேரத் தவறுகளைத் தவிர்க்க, சான்றிதழைச் சரிபார்த்துத் தெளிவான முறையில் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES