• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /மத்திய அரசின் 3 பெஸ்ட் திட்டங்கள்... பணத்தை சேமிக்க நல்ல வாய்ப்பு

மத்திய அரசின் 3 பெஸ்ட் திட்டங்கள்... பணத்தை சேமிக்க நல்ல வாய்ப்பு

Top 3 Government Schemes For Savings : மக்கள் தங்களின் வருமானத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்து, அதன்மூலம் நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைத்தால் இந்த மூன்று மத்திய அரசு திட்டங்களை தேர்வு செய்யலாம்.

Written BySudharsan G
Published: Aug 08, 2026, 06:05 PM IST|Updated: Aug 08, 2026, 06:12 PM IST
joinshare
மத்திய அரசின் 3 பெஸ்ட் திட்டங்கள்... பணத்தை சேமிக்க நல்ல வாய்ப்பு
Image Credit: Representational Image | X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Top 3 Government Schemes For Savings : 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எரிபொருள் தட்டுபாடு, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்டவை உலகம் முழுவதும் உள்ள மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

சமையல் எரிவாயு விலை, உணவுப் பொருள்களுக்கான விலை என அத்தியாசவசிய பொருள்களுக்கான விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், சேமிப்பு என்பதே தற்போது கடினமாகிவிட்டது. வருமானத்தை விட செலவு அதிகமாகும் சூழலில், சேமிப்பதற்கான வழியையும் மக்கள் தேடி வருகின்றனர், அதேநேரத்தில் அதிகம் ரிஸ்க் இருக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

அந்த வகையில், பொதுமக்களுக்கு பயனளிக்கக் கூடிய மத்திய அரசின் இந்த மூன்று சேமிப்பு  திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம். இதன்மூலம் மக்கள் தங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பாக சேமிக்கலாம்.

1. அடல் பென்ஷன் யோஜனா (APY)

  • அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது அரசின் பென்ஷன் திட்டமாகும்.
  • இது அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக முதன்மையாக கொண்டுவரப்பட்டது. அதாவது, முறையான ஓய்வூதிய பலன்கள் ஏதும் இல்லாத தொழிலாளர்கள், இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியப் பலன்களை பெறலாம்.
  • இந்த திட்டத்தின் பயனாளிகள், மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு வகையில் பணத்தை செலுத்தலாம். 60 வயது வரை பணம் செலுத்தலாம்.
  • இதன்மூலம், ஓய்வு காலத்தில் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 என உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தை பெறலாம்.

2. சுகன்யா சம்ருதி யோஜனா (SSY)

  • சுகன்யா சம்ருதி திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறு சேமிப்பு திட்டமாகும்.
  • இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கோ அல்லது திருமணத்திற்கோ பணத்தை சேமிக்க இயலும்.
  • இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படும். பல ஆண்டுகள் சேமிக்கும்போது கூட்டு வட்டிகளின் பலன்களும் கிடைக்கும்.
  • இதனால், பல வங்கிகளின் நிலையான டெபாசிட் திட்டங்கள் மற்றும் பொது வைப்புத்தொகை திட்டம் ஆகியவற்றை விட அதிக பலன் கிடைக்கும். வட்டி விகிதமும் ஒவ்வொரு காலாண்டிலும் அரசால் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

3. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா (PM-JAY)

  • 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது ரொக்கமில்லா மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும்.
  • இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். பட்டியலிடப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
  • இதன்மூலம், மருத்துவத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. கட்டணமின்றி மருத்துவ சிகிச்சைகளையும், மருந்துகளையும் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலமும் உங்களின் பணம் சேமிக்கப்படும்.
Add Zee News as a Preferred Source
TAGS:
Central Govt Schemes