SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : AI மனித இனத்தை அழிக்கும்-என ஆய்வாளர்கள் எச்சரிப்பது ஏன்? முக்கிய காரணங்கள்!

ஆரம்பத்தில் AI என்பதை நாம் அனைவரும் வியப்புடன் பார்த்த காலம் போய், இப்போது அனைவரும் அதை பார்த்து அஞ்சும் காலம் வந்து விட்டது. இதை பார்த்து, நாம் ஏன் பயப்பட வேண்டும்? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன என்று இங்கு தெரிந்து கொள்வாேம்.

Written By Yuvashree M
Published: Sep 14, 2026, 07:20 PM IST | Updated: Sep 14, 2026, 07:26 PM IST
Image Credit: AI Danger | X Page
Join

கடந்த சில ஆண்டுகளில், பல முறை AIயுடன் மிக நெருக்கமாக வேலை செய்த பலர், அது குறித்து மக்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அவர்கள் வைக்கும் ஒரே கூற்று ‘செயற்கை நுண்ணறிவால் கண்டிப்பாக மனிதர்களுக்கு ஆபத்து வரும்’ என்பதுதான், சமீபத்தில், Anthropic நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்த ஜேக்கப் காக்ஸானும் அப்படி AI துறையை விட்டு வெளியே வந்தவர்களுள் ஒருவர்.

வரும் 10 ஆண்டுகளில் AI மக்களை கொன்று விடுமா?

Anthropic நிறுவனத்தில், Evan Hubinger எனும் ஆய்வாளர் வேலை பார்த்து வருகிறர். அவர், அடுத்த 10 ஆண்டுகளில் AI மனிதர்களை கொல்வதற்கான சாத்தியக்கூறுக்ள் 10% இருப்பதாக கூறப்படுகிறது. பிற ஆய்வாளர்களும், இதையே ஒரு பயமுறுத்தும் கூற்றாக கூறி வருகின்றனர். இப்படி அனைவரும், “ஏஐ உங்களை கொன்று விடும்” என்கின்றனரே, இதற்கு என்ன அர்த்தம்?

ஒரு Chatbot திடீரென உயிர்பெற்று, மனிதர்களை பிணையம் வைத்துக்கொள்ளும் அல்லது அழிக்கும் என்பது இதற்கு அர்த்தம் கிடையாது. நமக்கு இதன் மீது இருக்கும் கவலையே, AI தன் தகுதிக்கு மீறி பல விஷயங்களை கற்றுக்கொண்டு, இன்னும் பல விஷயங்களுக்கு அதற்கு அனுமதி கிடைத்தால் அது கம்பூட்டர், நெட்வர்க்கை தாண்டி மனிதர்கள் போலவே புரிந்து கொள்ளும் திறனும், ஒரு விஷயத்தை கணிக்கும் திறனும், தன் நடவடிக்கையை அடக்கிக்கொள்ளும் உணர்வும் வந்து விடுமோ என்கிற அச்சம்தான் ஆய்வாளர்களை இப்படி பேச வைக்கிறது.

ஏஜிஐ (AGI), சூப்பர் இன்டெலிஜென்ஸ் (superintelligence), அலைன்மென்ட் (alignment) மற்றும் ரெகர்சிவ் செல்ஃப்-இம்ப்ரூவ்மென்ட் (recursive self-improvement) ஆகியவை செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு குறித்து பேசும் போது, முக்கிய வாதங்களாக இருக்கின்றன. இந்த நான்கு சொற்களைப் புரிந்துகொள்வது, ஆராய்ச்சியாளர்கள் எதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் என்பதையும், அந்தச் சூழ்நிலைகள் நாம் இன்று பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

சாத்தியக்கூறுகள் என்ன?

ஏஐ மனிதர்களுக்கு டேஞ்சர் என்பதை சில சாத்தியக்கூறுகள் காட்டுகின்றன. இதை உபயோகிப்பவர்கள் தவறாக கையநள்வதால், அது மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் கருவியாக மாறுகிறது. இதனால், நிரந்தர பாதுகாப்பற்ற வகையில் இருக்கும் கருவிகளை AIஆல் எளிதில் ஊடுருவ முடியும். அது மட்டும் கிடையாது, பாதுகாப்பாக இருக்கு ஒரு கருவியை கூட, AIஆல் ஊடுருவ முடியும்.

இதன் முழு தீவிரமான வடிவமே, மனிதர்கள் புரிந்துகொள்ளவோ கட்டுப்படுத்தவோ முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவு தன்னுடைய சொந்த திறங்களை மேம்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு எதிர்காலத்தைகொண்டுள்ளது. இதனால்தான், இந்த துறையை சேர்ந்த சொற்களை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க | Explainer : மின்சார கட்டணம் உயர்வது ஏன்? பொது மக்களின் குற்றச்சாட்டும்..அரசு கூறும் பதிலும்!

ஏஐ-ஆல் ஏற்படும் தீங்கு:

செயற்கை நுண்ணறிவால் ஏற்கனவே தவறான தகவல்கள், மோசடிகள், ஒரு தலைபட்சமான முடிவுகள், இணையவழி தாக்குதல்கள் மற்றும் செயற்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாடு போன்றவற்றின் மூலம் தீங்கு விளைவிக்க முடியும். இந்த தொழில்நுட்பமானது, வளர்ச்சியடைந்து, தன்னாட்சி அம்சங்களை பெறும் போது, செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகள், அதிகரிக்கும்.

இந்த ஆபத்து தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகள், செயற்கை நுண்ணறிவின் திறன்க்ளையும் அதன் பயன்பாட்டை சார்ந்துள்ளனஎன சைபிள் எனும் நிறுவனத்தின் செயல் துணை தளைவர் மந்தர் பட்டீல் தெரிவித்திருக்கிறார்.

மனிதர்கள் அளவுக்கு AIக்கு சிந்தனை!

AGI என்றால், Artificial general intelligence. AI கருவிகளுள் ஒன்றாக இருக்கும் இது, அதிக அறிவிப்பூர்வமகாவும் மனிதர்களை விட மிக அதிகம் யோசிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளன.

இன்றைய நாளில், AIஆல் எழுதவும், கோடிங் செய்யவும், ஒரு போட்டோவை பகுப்பாய்வு செய்யவும் முடியும். ஆனால், இப்போதைக்கு இதனால் மனிதர்கள் போல முழுமையாக தினசரி நடவடிக்கைகளை யோசிக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு, மனித நுண்ணறிவை மிஞ்சினால் என்ன ஆகும்?

ஏஜிஐ என்பது, செயற்கை நுண்ணறிவு ஏறக்குறைய மனித அளவிளான திறன்களை எட்டுவதை விவரித்தால், இது மனிதர்களின் திறனை விஞ்சிய ஒரு விஷயத்தை விவரிக்கும்.

ஒரு செயகை நுண்ணறிவு, மனிதர்களை விட சிறப்பாக செஸ் ஆடுகிறது என்றாலோ, ஒரு கோடிங்கை உருவாக்குகிறது என்றாலோ அது சூப்பர் இண்டலிஜென்ஸ் ஆகி விட முடியாது. இருப்பினும், இது போன்ற விஷயங்களில், மனிதர்களை விட AI சிறப்பாக செயல்படுகிறது என்றால், அது மிகவும் கவலைக்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்களின் அச்சம்!

ஏஐ அதாவது சூப்பர் இண்டலிஜென்ஸ், மென்மேலும் இதனை வளர்த்துக்கொள்ள மனிதர்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவுகிறது. அதாவது, இன்னும் திறமையான அடுத்த தலைமுறை அமைப்புகளை உருவாக்க அது பெரும் பங்களிக்கிறது. இந்த செயல்முறையானது, காலப்போக்கில் வேகமடையக்கூடும் என்பதூதான் ஆராய்ச்சியாளர்களின் அச்சமாக இருக்கிறது. அதிக திறன் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு என்பது, ஒரு சிறந்த நுண்ணறிவை உருவாக்க உதவுகிறது. இந்த சிறந்த நுண்ணறிவு, அதை விடவும் அதிக திறன் கொண்ட ஒன்றை உருவாக்க உதவுகிறது. இவ்வாறுதான் சூப்பர் இண்டெலிஜன்ஸ் சுழற்சியானது நடக்கிறது.

சமீபத்திய ஆய்வுகளின்படி, 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள நிறுவனங்களில், 64% செயற்கை நுண்ணறிவுத்தோல்விகள் காரணமாக 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைகளை இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவியின் சுழற்சிக்கு ஏற்ப, அதற்கு ஏற்ற பாதுகாப்பினை வழங்குவதே நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.

மேலும் படிக்க | Explainer: அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் என்ன? மாநில முதன்மை சிக்கல்களில் இதன் முக்கியத்துவம் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES