• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /இனி தட்கல், RAC, வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் புதிய நடைமுறை!

இனி தட்கல், RAC, வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் புதிய நடைமுறை!

Vande Bharat Ticket Booking Rule: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் சில புதிய நடைமுறையை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது. எனவே, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 11:48 IST|Updated: Nov 16, 2026, 12:01 IST
joinshare
இனி தட்கல், RAC, வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் புதிய நடைமுறை!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vande Bharat Sleeper Rail Ticket Booking Rule: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.  ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளையும் இந்தியன் ரயில்வே செய்து வருகிறது. மேலும், பல்வேறு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சூப்பர் பாஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்

இதில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது வந்தே பாரத் ரயில் சேவை.  வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வந்தே பாரத் ரயில்கள் வட மாநிலங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது. 

அதன்படி, டெல்லி - வாரணாசி (உத்தர பிரதேசம்), கொல்கத்தா - கவுகாத்தி (அசாம்), மும்பை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என இந்திய ரயில்வே  அறிவித்துள்ளது. அதாவது, ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட், தட்கல் முறை இருக்காது என இந்தியன் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: ரயில் பயணிகளே அலர்ட்! RAC முறை ரத்தாகிறதா? இந்தியன் ரயில்வே எடுத்த முடிவு

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்

  • தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை இருக்காது
  • ஆர்ஏசி டிக்கெட் முறை இருக்காது
  • வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் முறை இருக்காது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, தட்கல் வசதி இருக்காது என்பதுதான். பயணிகள் கடைசி நேர தட்கல் முன்பதிவுகளை நம்பி இருக்க முடியாது என்றும், தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். அனைத்து முன்பதிவுகளும் வழக்கமான ரயில்வே முன்பதிவு முறை மூலமாகவே செய்யப்படும்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவைகளில் உறுதிசெய்யப்பட்ட படுக்கைகள் மட்டுமே வழங்கப்படும். ஆர்ஏசி (RAC) டிக்கெட் முறை அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகள் இருக்காது என இந்தியன் ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பயணிகள், குறிப்பாக விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகைக் காலங்களில் பயணம் செய்யும்போது, ​​இருக்கைகள் உள்ளதா எனச் சரிபார்த்து முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: இனி மின்சார ரயில்களில் ஆட்டோமெட்டிக் கதவுகள்... உயிரிழப்புகளை தடுக்க சூப்பர் பிளான்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு

இரவு நேரப் பயணங்களை மேலும் வசதியாக்க வடிவமைக்கப்பட்ட, முழுமையாக குளிரூட்டப்பட்ட 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், மூன்று வகுப்புகளில் மொத்தம் 823 படுக்கைகள் உள்ளன. 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் 611 படுக்கைகளும், 2ம் வகுப்பு ஏசி 188 படுக்கைகள், ஏசி முதல் வகுப்பில் 24 படுக்கைகள் என மொத்தம் 823 படுக்கைகள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் உள்ளன.

மேலும், இந்திய ரயில்வே சிறப்பு ஒதுக்கீடுகளின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. அதன்படி, ஏசி 3ம் வகுப்பு பெட்டியில் பெண் பயணிகளுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களுக்காக 21 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணம்

மும்பை - பெங்களூரூ வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரை, ஏசி 3ம் வகுப்பு பெட்டிக்கு ரூ.2810, ஏசி 2ம் வகுப்பு பெட்டிக்கு ரூ.3,630, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.4,450 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  400 கி.மீ வரை ஒரு பயணிக்கு கட்டணமாக ரூ.960 (3ம் வகுப்பு ஏசி பெட்டி) என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.960, அதிகபட்ச கட்டணமாக ரூ.13,300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரயிலில் போன் சார்ஜ் போட இனி கட்டுப்பாடு! ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு..
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways