• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /வேலையை விடப் போறீங்களா...? இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க... திகிலுட்டும் கூட்டம்

வேலையை விடப் போறீங்களா...? இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க... திகிலுட்டும் கூட்டம்

Wipro நிறுவனத்தின் நேரடி வேலைவாய்ப்பு நேர்காணலுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் கடும் போட்டி குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

Written BySudharsan G
Published: Nov 18, 2026, 20:16 IST|Updated: Nov 18, 2026, 20:29 IST
joinshare
வேலையை விடப் போறீங்களா...? இந்த வீடியோ கொஞ்சம் பாருங்க... திகிலுட்டும் கூட்டம்
Image Credit: Walk-in Interview huge crowd viral video | Screen Grab: X/@payalpixel

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் கால் பதிவிட்டது. இன்றைய சூழலில் வேலையில் இருப்பவர்களுக்கே தங்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகம் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் தினம் தினம் அப்டேட் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அப்டேட் ஆனால் மட்டுமே வேலையை தக்கவைக்கும் வாய்ப்புகள் ஓரளவு இருக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.

வேலையில் இருப்பவர்களுக்கே இத்தனை நெருக்கடி என்றால், தற்போது கல்லூரியில் படித்து வெளியே வேலையில் சேர வருபவர்களின் நிலையோ விவரிக்க இயலாதது. வேலை கிடைப்பது சவாலானதாக மாறியிருக்கிறது. புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் முதல் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் வரை பலரும் வேலைவாய்ப்புக்காக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: 3,941 காலியிடங்கள்... 8வது தேர்ச்சியுடன் தமிழ் தெரிந்தால் போதும்

இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ

இந்தச் சூழலில், ஒரு பிரபல நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு நேர்காணலுக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

X தளத்தில் பயல் குஷ்வாஹா என்ற பயனர் கவனம் ஈர்த்திருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பெரிய அலுவலக் கட்டடத்தின் வெளி கேம்பஸில் ஏராளமான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தையும் தாண்டி இந்த வரிசை நீண்டு நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

Unemployment at its peak Wipro walk-in interview reality huge crowd. https://t.co/4q4xJjOipL

— Payal Kushwaha (@payalpixel) November 17, 2026

வேலையை விடுவதற்கு முன்...

குறிப்பாக அந்த வீடியோவில், 'உங்களின் வேலையை ராஜினாமா செய்வதற்கு முன் இதை கண்டிப்பாக பாருங்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், WIPRO நிறுவனத்தின் நேரடி ஆட்சேர்ப்பு நேர்காணலுக்காக (Walk-in Interview) இவ்வளவு பேர் திரண்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது WIPRO நிறுவனத்தின் நேர்காணலா என்பதை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டதாகவும் பயனர் பதிவிட்டுள்ளார்.

Unemployment

வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரிக்கும் போட்டி?

இந்த வீடியோ அதிக கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, வேலைவாய்ப்பு சந்தையின் தற்போதைய நிலை குறித்து இணையவாசிகள் பலரும் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுக்கு அதிகமானோர் போட்டியிட வேண்டிய சூழல் நிலவுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | NLC நிறுவனத்தில் வேலை: 145 காலியிடங்கள்.... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இது இப்போது உருவான பிரச்னையா...?

2016ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த ஒருவர், அப்போதும் இதுபோன்ற வேலைவாய்ப்பு நேர்காணல்களில் அதிகமானோர் பங்கேற்றதாக அவரது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். எனவே, வேலைக்கு நிலவும் போட்டி என்பது செயற்கை நுண்ணறிவின் எழுச்சியால் மட்டுமே, அது எல்லா காலகட்டங்களிலும் இருந்து வந்திருக்கிறது என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Unemployment

ஆட்குறைப்பும்... பணி பாதுகாப்பு அச்சுறுத்தலும்...

தற்போது பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், புதிய பணியா்ளர்களைத் தேர்வு செய்வதில் மாற்றங்கள், வேலை பாதுகாப்பு குறித்த அச்சங்கள் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், தற்போதைய வேலையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அடுத்த வேலைவாய்ப்பை உறுதி செய்வது அல்லது போதுமான நிதி இருப்பைத் திட்டமிடுவது அவசியம் என்ற கருத்தும் இந்த வீடியோ மூலம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

இருப்பினும் ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலில் அதிகமானோர் பங்கேற்றிருப்பதை மட்டும் வைத்து ஒட்டுமொத்த இந்திய வேலைவாய்ப்பு சந்தையின் நிலையைத் தீர்மானித்துவிட முடியாது என்றும் பலர் கூருகின்றனர். ஆனாலும் வேலை தேடுபவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போட்டியை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | 8ம் வகுப்பு படித்தவரா? அஞ்சல் துறையில் சூப்பரான வேலை.. மாதம் ரூ.63,000 சம்பளம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu