முன்னர், யூடியூபில் வீடியோ போடுபவர்கள் எங்கேனும் ஒருவர்-இருவர் இருந்து வந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அந்த எண்ணிக்கை பன்மடங்காக மாறி விட்டது. இதனால், யூடியூப் தன்னுடைய கண்டண்ட் கிரியேட்டர்ஸிற்கு புதிதாக விதிமுறைகளை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருக்கிறது. தற்போது வந்திருக்கும் புது ரூல்ஸ், புதிதாக யூடியூப் சேனல் தொடங்க இருப்பவர்களுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது.
இந்த புதிய நடைமுறைகள், வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. யூடியூப் மூலம் வருமானம் ஈட்டும் புதிய படைப்பாளிகளுக்கு இது சவாலான ஒன்றாக அமையும் என கூறப்படுகிறது.
இந்த புதிய அறிவிப்பின்படி, புது கண்டண்ட் கிரியேட்டர்கள் கடந்த ஓராண்டில் சுமார் 8,000 மணி நேர வியூஸ் (Watch Hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 20 மில்லியன் shorts views கடந்திருக்க வேண்டும்.
இவை இரண்டுமே, தற்போது இருக்கும் 4,000 மணி நேர வியூஸ் மற்றும் 10 மில்லியன்ஸ் ஷார்ட்ஸ் வியூஸ் என்கிற அளவீட்டை விட இரண்டு மடங்காக இருக்கிறது.
அதே சமயத்தில், தற்போதைய விதிப்படி யூடியூப் சேனல் பணம் ஈட்ட வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 1000 சப்ஸ்க்ரைபர்ஸ் ஆவது இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. இந்த விதியில், எந்தவித புதிய மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே, யூடியூப் பார்ட்னர் எனும் புரோகிராமில் இருக்கும் படைப்பாளிகளுக்கும் இந்த புதிய விதி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். Shorts Videos மூலமாக, தொடர்ந்து விளம்பரம் மூலம் வருமானம் பெறுவதற்கு அவர்கள் 90 நாட்கள் 10 மில்லியன் Shorts Views தக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டுமாம்.
இந்த இலக்கை தவற விடும் சேனல்கள், long term videos அதாவது நீண்ட அளவிலான வீடியோக்களை பதிவிட்டு, அதன் மூலம் தொடர்ந்து சம்பாதிக்கலாம். இவர்கள், மீண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, ஷார்ட்ஸ் மூலம் வரும் வருமான பகிர்வு தானாக தொடங்கி விடும்.
Shorts vidoesகளுக்கான தகுதிகளைத்தான் தற்போது யூடியூப் கடினமாக்கி இருக்கிறதூ. ஆனால், ஷாப்பிங் போனஸ்கள், பிராண்ட் பார்ட்னர்ஷிப் சலுகைகள் மற்றும் புதிய ட்ரெண்ட்களை தொடங்கும் போது கிரியேட்டர்களுக்கான சிறப்பு சலுகைகள் போன்ற கூடுதல் வருமான வழிகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.