அன்பில் மகேஸ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!
திமுக ஆட்சிக் காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரமும், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளும் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ. 100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்றதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
அவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்ததையடுத்து, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அன்பில்