SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

10ம் வகுப்பு படித்தவரா? ஆதார் மையத்தில் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்!

Aadhaar Jobs: ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஆதார் சேவை மையத்தில் 432 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Aug 07, 2026, 06:33 PM IST | Updated: Aug 07, 2026, 06:51 PM IST
Join

Aadhar Recruitment 2026: ஆதார் கார்டு மக்களின் முக்கிய ஆவணமாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.  இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. நம் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஆதார்  மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவ்ல தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆதார் கார்டுகளை UIDAI எனும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஆதார் சேவை மையத்திற்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆதார் சேவை மையத்தில் வேலை

இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தில் 432 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், கோவா, பீகார், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட  29 மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சேவை மையத்தில் ஆதார் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

காலிப் பணியிடங்கள் விவரம்


 

மாநிலம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
தமிழ்நாடு (நாகப்பட்டினம்)
 
01
ஆந்திரா 10
கர்நாடகா116
தெலங்கானா04
ராஜஸ்தான்39
பஞ்சாப்09
ஹரியானா15
பீகார்101
உத்தர பிரசேதம்29

கல்வித்தகுதி

இதில் ஏதேனும் ஒரு தகுதியுடையவர்கள் ஆதார் மைய பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கல்வித்தகுதியுடன் விண்ணப்பதாரர்கள் UIDAI அங்கீகரித்த Testing and certifying agency மூலம் வழங்கப்பட்ட ஆதார் ஆபரேட்டர்/மேற்பார்வையாளர் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் இல்லையெனில் விண்ணப்பிக்க தேவையில்லை.

வயது விவரம், சம்பளம்

ஆதார் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  ஆதார் மையத்தில் மேற்பார்வையாளர்/ஆபரேட்டர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் வேலைவாய்ப்புக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் csc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் career என்ற ஆப்ஷனில் சென்று, உங்கள் மாநிலத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES