AAI Recruitment 2026 : இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில், 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.
இந்திய விமான நிலையத்தின் ஆணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மேலாளர் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி: ஜூனியர் எக்ஸிகியூடிவ் (Junior Executive)
மொத்த காலியிடங்கள் : 129
துரைவாரியான காலியிடங்களின் விவரம்:
Junior Executive (finance)-36
Junior Executive (law) -6
Junior Executive (Operations - 79)
Junior Executive (Surgery & Cartography) -8
இதற்கான சம்பளமாக மாதம் ரூ.40,000ல் இருந்து ரூ.1,40,000 வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியியல் பிரிவில், எம்.பி.ஏ, எல்.எல்.பி முடிஹ்த்டு பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், பி.எஸ்சி, சிஎஃபே, சிஏ, எம்.எஸ் சி முடித்தவர்கள், தங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். இதற்கு பணி அனுபவம் தேவையில்லை என்பதால், புதிதாக பட்டம் பெற்றவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
7.9.2026 தேதியின் படி, இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில், எஸ்சி, எச்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
மொத்தமாக இருக்கும் காலியிடங்கள் :260
வேலை பதவி - Manager (Eng. - Civil) - 145
இதற்கான சம்பளம், மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை
ஓபிசி, EWS, பொது பிரிவினருக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திரனாளிகள், பெண்கள், ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணமில்லை.
www.aai.aero எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் (07/09/2026) விண்ணப்பிக்க வேண்டும்.