BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ரூ.50,000 சம்பளம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
BEL Recruitment 2026: BEL ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கியது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 27-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
BEL Recruitment 2026: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 'புராஜெக்ட் இன்ஜினியர்' (Project Engineer) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
BEL ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கியது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 27-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
BEL Recruitment 2026: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- BEL நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் பதவிக்கு அப்ளை செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அக்டோபர் 1, 2026-ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
- அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும், விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.இ. (BE) அல்லது பி.டெக். (B.Tech) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BEL Recruitment 2026: மாத ஊதியம்
புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹50,000 ஊதியமாக வழங்கப்படும். இது தவிர, ஆண்டுதோறும் ஊதியத்தில் ₹5,000 உயர்வு (increment) வழங்கப்படும்.
மேலும் படிக்க | காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு : ரூ.25 ஆயிரம் சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி?
BEL Recruitment 2026: தேர்வு முறை
- விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வுக்கு 85 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
BEL Recruitment 2026: விண்ணப்பிக்கும் முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைனில் பதிவு செய்ய, முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான belindia.in-க்குச் செல்லவும்.
- இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'ஆன்லைன் பதிவு' (Online Registration) பகுதியை கிளிக் செய்யவும்.
- தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளிடவும்.
- விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- இறுதியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை (printout) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முக்கிய அறிவிப்பு! இலவச வகுப்புகள் முழு விவரம்
பயிற்சி பணியிடங்களுகான அறிவிப்பு
புராஜெக்ட் இன்ஜினியர் தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பயிற்சிச் சட்டத்தின் (Apprentices Act, 1961) கீழ், NATS/NAPS திட்டத்தின் வாயிலாக ஓராண்டு கால பயிற்சி ஒப்பந்த அடிப்படையில், பட்டதாரி பயிற்சி (Graduate Apprentice), டிப்ளோமா பயிற்சி (Diploma Apprentice) மற்றும் ஐடிஐ பயிற்சி (ITI Apprentice) பெறுபவர்களுக்கான 29 பணியிடங்களையும் அறிவித்துள்ளது.
இதற்கான நேர்காணல் (walk-in interview), பட்டதாரி மற்றும் டிப்ளோமா பயிற்சிப் பணியிடங்களுக்கு 22 அக்டோபர் 2026-அன்றும், ஐடிஐ பயிற்சிப் பணியிடங்களுக்கு 23 அக்டோபர் 2026-அன்றும் நடைபெறவுள்ளது. பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித்தொகை, அந்தந்தப் பிரிவைப் பொறுத்து மாறுபடும். அதன்படி, பட்டதாரி பொறியியல் பிரிவினருக்கு ரூ. 17,500-ம், பிற பட்டதாரி மற்றும் டிப்ளோமா பிரிவினருக்கு ரூ. 12,500-ம், ஐடிஐ பிரிவினருக்கு ரூ. 11,040-ம் வழங்கப்படும். தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள், NATS 2.0 அல்லது NAPS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஏற்கனவே NATS அல்லது NAPS திட்டத்தின் கீழ் பயிற்சி பெறாதவர்கள் அல்லது தற்போது பயிற்சி பெறாதவர்கள் மட்டுமே, தேவையான ஆவணங்களுடன் இந்த நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | UCO வங்கியில் வேலை வாய்ப்பு! 530 காலியிடங்கள்-Any Degree..உடனே அப்ளை பண்ணுங்க..