Chengalpattu Jobs: செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் சிறப்பு இல்லம் (சிறார்கள்) மற்றும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பணியாற்றிட ஏதுவாக கீழ் குறிப்பிட்டுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசினர் சிறப்பு இல்லம் (சிறார்கள்) மற்றும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள 34 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. உதவி பொறுப்பு அலுவலர், இல்ல நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநகர், பண்டக பொறுப்பாளர் மற்றும் கணக்காளர், இல்ல தந்தை/தாய், துணை மருத்துவ பணியாளர், கற்பித்தாளர், கலை மற்றும் இசை ஆசிரியர், யோகா பயிற்றுநர், சமையலர், இரவு காவலர், இல்ல பேணுநர் ஆகிய பணியடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பள விவரங்களை பார்ப்போம்.
கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Post Graduate degree in Social Work /Sociology/Child Administration/Psychology/Development/Human Rights Public Psychiatry/ Law/ Public Health/Community Resource Management என ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் - சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம் - மாதம் ரூ.33,100 வழங்கப்படும்.
காலிப் பணியிடங்கள் - 4
கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்ப்டட கல்வி நிறுவனத்தல் B.A in Social Work/ Sociology/ Social Sciences or LLB படித்திருக்க வேண்டும்.
அனுபவம் - குழந்தைகள் மற்றும் பெண்கள் நலம் சார்ந்த நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - மாதம் ரூ.23,170
காலிப்பணியிடங்கள் - 4
கல்வித்தகுதி - இந்த பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவயில் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ.23,170 வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் - 4
மாத சம்பளம் - ரூ.18,536 வழங்கப்படும்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி - commerce/mathematics பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் - 4
கல்வித்தகுதி - 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூ.14,564 மாத சம்பளமாக வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் -2
கல்வித்தகுதி - இந்த பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் nursing assistant படித்திருக்க வேண்டும்
சம்பளம் - ரூ.11,916 வழங்கப்படும்.
காலிப் பணியிடங்கள் - 4
கல்வித்தகுதி - ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ முடித்திருக்கலாம் அல்லது பட்டப்படிப்பு படித்திருக்கலாம்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம் - ரூ.10,000 மாதம் வழங்கப்படும்.
காலிப் பணியிடங்கள் - 2
கல்வித்தகுதி - வரைதல் மற்றும் ஓவியம் வரைதலில் சான்றிதழ் / பட்டயம் / இளங்கலைப் பட்டம் அல்லது இசையில் சான்றிதழ் / பட்டயம் / இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் - மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
காலிப்பணியிடங்கள் - 4
சம்பளம் - மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.
கல்வித்தகுதி - யோகா படிப்பில் டிப்ளமோ/ பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி - 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம் - ரூ.9,930
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் - இரவு காலவர் பணிக்கு -2. இல்ல பேணுநர் பணிக்கு 1 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
மாத சம்பளம் - ரூ.7,944 வழங்கப்படும்.
கல்வித்தகுதி - 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது - 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியே விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். http://chengalpattu.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அறை எண்.Fo-06, தரை தளம், F. Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111.
என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 6382613173 & 9789422159 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.