• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /10,000 காலிப்பணியிடம்.. ஆகஸ்ட் 22 மெகா வேலைவாய்ப்பு முகாம் - எங்கு, எப்போது?

10,000 காலிப்பணியிடம்.. ஆகஸ்ட் 22 மெகா வேலைவாய்ப்பு முகாம் - எங்கு, எப்போது?

Chennai Job Fair: சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

Written ByUmabarkavi K
Published: Aug 14, 2026, 04:53 PM IST|Updated: Aug 14, 2026, 05:10 PM IST
joinshare
10,000 காலிப்பணியிடம்.. ஆகஸ்ட் 22 மெகா வேலைவாய்ப்பு முகாம் - எங்கு, எப்போது?
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Job Fair: தமிழக அரசு இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், பல்வேறு நலத்திடங்கள், வகுப்புகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. 

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

இதன் மூலம், பல்வேறு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார். 

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.08.2026 அன்று சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

10,000 காலிப் பணியிடங்கள்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில்கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

எப்படி கலந்து கொள்வது?

இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் , https://forms.gle/W4Kvwo9LeMZg4sKS7 Google Link-லோ தங்களது விவரங்களை பதிவு செய்துக் கொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற இருந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தூய பரலோக மாதா பேராலயத்திருவிழாவை முன்னிட்டு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஆதலால் அன்று (14.08.2026) நடைபெற இருந்த சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.08.2026 (வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருமதி பேச்சியம்மாள் அவர்கள் தெரிவித்துள்ளார்

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu