CPCB Recruitment 2026: மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களுக்கு முக்கிய தகவல் உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) பணிபுரிய ஒரு சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விஞ்ஞானி (Scientist), உதவி மேலாளர், நிர்வாக உதவியாளர், அறிவியல் உதவியாளர், தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் (Data Entry Operator) மற்றும் கள உதவியாளர் (Field Assistant) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை CPCB அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு cpcb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) |
| அறிவிக்கை எண் | 02/ WQM-II/ 2025- Admin.(R) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 51 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்ப செயல்முறை தொடக்கம் | 24.08.2026 |
| விண்ணபிக்க கடைசி நாள் | 07.09.2026 |
கங்கை நதி தொடர்பான ஒரு திட்டத்திற்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக 'அறிவியல் உதவியாளர்' (Scientific Assistant) பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகிய தகவல்களை இங்கே காணலாம்.
பதவி: விஞ்ஞானி-D
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.1,71,597
வயது வரம்பு: 50 வயது
கல்வித் தகுதி:
பதவி: விஞ்ஞானி-C
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.1,48,997
வயது வரம்பு: 45 வயது
கல்வித் தகுதி:
பதவி: விஞ்ஞானி-B
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.1,25,380
வயது வரம்பு: 35 வயது
கல்வித் தகுதி:
பதவி: உதவி மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.1,19,272
வயது வரம்பு: 35 வயது
கல்வித் தகுதி:
பதவி: நிர்வாக உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.77,654
வயது வரம்பு: 35 வயது
கல்வித் தகுதி:
பதவி: அறிவியல் உதவியாளர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: ரூ.77,654
வயது வரம்பு: 35 வயது
கல்வித் தகுதி:
பதவி: வகைப்பாட்டியலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.65,031
வயது வரம்பு: 35 வயது
கல்வித் தகுதி:
பதவி: தரவு உள்ளீட்டுப் பணியாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.57,498
வயது வரம்பு: 32 வயது
கல்வித் தகுதி:
பதவி: கள உதவியாளர்
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ.38,741
வயது வரம்பு: 27 வயது
கல்வித் தகுதி:
தகுதி மற்றும் அனுபவ நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் அல்லது எழுத்துத் தேர்வுக்காக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் (CPCB) அழைக்கப்படுவார்கள். இச்செயல்முறையில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் முதலில் விண்ணப்பிக்கும் நடைமுறையை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 7, 2026 ஆகும். நேர்காணல்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களை மண்டல அலுவலகங்களிலோ (லக்னோ, கொல்கத்தா, சண்டிகர்) அல்லது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திலோ பணியமர்த்தும் உரிமையை வாரியம் கொண்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.