India Post Recruitment 2026: மத்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்திய அஞ்சல் துறையில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர வேலை, கைநியை சம்பளம் போன்ற காரணங்களால் அஞ்சல் துறையில் வேலை கிடைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆண்டுதோறும் அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்திய அஞ்சல் துஐறயில் கிளை அஞ்சல் அதிகாரி (BPM), உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ABPM) மற்றும் டாக் சேவக் (Dak Sevak) ஆகிய தற்காலிக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,095 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும், பீகாரிலி 1,098 பணியிடங்கள், கர்நாடகாவில் 1,116 பணியிடங்கள், கேரளாவில் 1,379 பணியிடங்கள், மேற்கு வங்கத்தில் 1,619 பணியிடங்கள், மகாராஷ்டிராவில் 2,297 பணியிடங்கள், ஜார்க்கண்டில் 1,379 பணியிடங்கள் என மொத்தம் 23,757 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
10ம் வகுப்பு வகுப்பில் எத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மெரிட் லிஸ்ட் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு sms அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, நேர்காணல் குறித்த தேதி அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அப்போது, உங்கள் உங்கள் கல்விச் சான்றிதழ், ஆதார், பான் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். இதனை அதிகாரிகள் சரிபார்த்து பணிநியமன கடிதத்தை வழங்குவார்கள். கடிதம் பெற்ற 30 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும்.
பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகளும் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.