IOB Recruitment : சென்னையை, தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)ல் மொத்தம் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று வரை மட்டுமே வரவேற்கப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இ்கு தெரிந்து கொள்வோம்.
பணி : Local Bank Officer
காலியிடங்கள் : 250 (தமிழ்நாடு மட்டும் 100)
பணியிடங்கள் : தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகம், குஜராத்
சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை
ஏதாவது ஒரு துறையில், இளநிலை பட்டத்தை பெற்றிருக்க வேண்டும்.
பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் எழுதவும் பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
1.8.2026ஆம் தேதியின் படி, 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின் படி, வயது வரம்பி தளர்வுகள் வழங்கப்படும்.
மேற்கூறிய தேர்வுகளின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த பிற விவரங்கள் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.
சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல இதர பிரிவினருக்கு ரூ.850 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
https://www.iob.bank.in/en/careers எனும் இணையதளத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த தேர்வுகள் நடைபெறுகிறது. ஆங்கில புலமை, தரவுபகுத்தறிவு மற்றும் கணினித் திறன், பொது அறிவு / பொருளாதாரம் / வங்கித் துறை விழிப்புணர்வு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் 200 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 140 கேள்விகளுடன் இந்த தேர்வு நடைபெறும். ஒரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் குறையும். மொத்தம் 3 மணி நேரம் இந்த தேர்வு நடக்கும்.