• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு! டிகிரி இருந்தா போதும்..அப்ளை செய்வது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு! டிகிரி இருந்தா போதும்..அப்ளை செய்வது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 250 வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 19, 2026, 02:10 PM IST|Updated: Aug 19, 2026, 02:19 PM IST
joinshare
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு! டிகிரி இருந்தா போதும்..அப்ளை செய்வது எப்படி?
Image Credit: IOB Job | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

Explained: கிரீன் கார்டுக்கு தடை!! இந்திய ஐடி ஊழியர்கள், நிறுவனங்கள் மீதான உடனடி தாக்கம் என்ன?

2

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

3

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

4

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

5

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த வங்கியில், உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதுமாக மொத்தம் 250 பணியிடங்கள் இதன்படி நிரப்பப்பட இருக்கின்றன. இந்தியா முழுவதும் இருக்கும் 250 பணியிடங்கள் இதில் நிரப்பப்பட இருக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 100 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 250ஆக இருக்கிறது.

வயது தகுதி : 01.08.2026 அன்று, 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு இருகிரது.

சம்பளம் எவ்வளவு?

இதற்கான சம்பளம், ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை இருக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை எப்படி?

இந்த பணியிடங்களுக்கான தேர்வு, கணினி வழியே நடத்தப்படும். மேலும், வட்டார மொழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில்தான், இதற்கான தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், வட்டார மொழித்தேர்வு தகுதி தேர்வு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி வழி நடைபெறும் தேர்வில், திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/வங்கி சார்ந்த 140 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு சுமார் 3 மணி நேரம் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை இதோ:

  • www.iob.bank.in என்கிற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இதற்கான விண்ணப்ப கட்டணம், ரூ.850 ஆகும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 ஆக இருக்கிறது.
  • www.iob.bank.in என்கிற இணையதளத்தில் நுழைந்தவுடன், Careers எனும் பக்கம் திறக்கும். அதில், Recruitment of Local Bank Officers – 2026-27 எனும் லிங்கை க்ளிக் செய்து, அதில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பித்த பிறகு உங்களுடைய மெயில் ஐடிக்கோ, மொபைலுக்கோ ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் பாஸ்வார்ட் ஆகியவை வரும். அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பதிவு செய்யும் போது விண்ணப்பத்தாரர்கள் அவர்களின் போட்டோ, கையெழுத்து உள்ளிட்டவற்றை Annexure IIவில் அப்லோட் செய்ய வேண்டும்.
  • கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
  • குறிப்பு: நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களும் உண்மையாகவும்,  திருத்தங்கள் இன்றியும் இருக்க வேண்டும். உங்கள் அல்லது உங்கள் கணவர்/தந்தையின் பெயரில் ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி எது?

உங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க, 24.08.2026 கடைசி தேதியாகும்.

பணியிட விவரங்கள்:

250 பணியிடங்களில், 100 பணியிடங்கள் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவில் 50 பணியிடங்களும், மகாராஷ்டிராவில் 50 பணியிடங்களும், குஜராத்தில் 50 பணியிடங்கலும் நிரப்பப்பட இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் பணியிடங்களில் 15 எஸ்.சி பிரிவினருக்கும், 6 பணியிடங்கள் எஸ்.டி பணியிடத்திற்கும், 33 பணியிடங்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 9 பணியிடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கும், 37 பணியிடங்கள் பொது பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்ன?

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் டிகிரி படித்தவராக இருக்க வேண்டும்.

கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu