• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /இலவச லேப்டாப், மிதிவண்டி.. ரூ.1,000 உதவித்தொகையுடன் ஐடிஐ பயிற்சி - தமிழக அரசின் அறிவிப்பு!

இலவச லேப்டாப், மிதிவண்டி.. ரூ.1,000 உதவித்தொகையுடன் ஐடிஐ பயிற்சி - தமிழக அரசின் அறிவிப்பு!

TN Govt ITI Admission: தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த படிப்பில் சேரலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Aug 16, 2026, 09:54 AM IST|Updated: Aug 16, 2026, 10:21 AM IST
joinshare
இலவச லேப்டாப், மிதிவண்டி.. ரூ.1,000 உதவித்தொகையுடன் ஐடிஐ பயிற்சி - தமிழக அரசின் அறிவிப்பு!
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt ITI Admission: தமிழகம் முழுவதும் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கையும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்ணக்கான மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்து வருகின்றர். 

அந்த வகையில், 2026ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 277 தனி யார் நொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. 

இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 2027 ம் ஆண்டு கலந்தாய்வுக்கான கால அவகாசம் 14.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைாய்ப்பை பெற்றுள்ளனர். 

தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.

மாதம் ரூ.30,000 சம்பளம்

குறைந்த பட்சம் ரூ 20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ 30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு/ பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். சம்பாதித்துக்கொண்டே மேற்படிப்புகளை தொடரலாம்.

உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 1.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000/-கூடுதலாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் : 9499055642/whatsapp எண் : 9499055612 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu