Kanchipuram Jobs: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தொழற் பயிற்சி நிலையத்தில் காலிப் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதியானது 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பை பொறுத்தவரை, அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது அனைத்து பிரிவினருக்கு 18 உச்ச வயது வரம்பு இருக்க வேண்டும். oc பிரிவினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும். BC/MBC/DNC பிரிவினருக்கு 34 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SC/SCA/ST, கைம்பெண்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு மேல் கல்வித் தகுதியுடைய BC/MBC/SC/SCA/ST வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும். முன்னாள் ராணுவத்திருக்கு வயது வரம்பு OC பிரிவினருக்கு 48 வயதுக்குள் இருக்க வேண்டும். BC/MBC/DNC/SC/SCA/ST பிரிவினருக்கு 53 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,000 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் இப்பணியிடத்திற்கான அனைத்து அசல் சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பமிட்டு (Self Attested) சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 30.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. 30.09.2026 அன்று மாலை 5.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் / காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் / முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி - முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், எண், 7. 26, புத்தேரி தெரு, கைலாசநாதர் கோவில் பின்புறம், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.