SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கன்னியாகுமரி அரசு வேலைவாய்ப்பு : ரூ.18,000 சம்பளம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Kanyakumari Govt Jobs 2026 : கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 சம்பளம். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 12, 2026, 11:46 AM IST | Updated: Aug 12, 2026, 11:55 AM IST
Join

Kanyakumari Govt Jobs 2026 : தமிழ்நாடு சுகாதார முறைமை சீர்திருத்த திட்டத்தின் (TNHSRP) கீழ், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள செவிலியர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.  

பணி மற்றும் தகுதி விவரங்கள்:

பதவியின் பெயர்: ட்ராமா ரெஜிஸ்ட்ரி செவிலியர் (Trauma Registry Staff Nurse)  
காலிப்பணியிடங்கள்: 1  
மாதச் சம்பளம்: ரூ. 18,000  

கல்வித் தகுதி: செவிலியர் பட்டயப்படிப்பு (Diploma in Nursing) அல்லது இளங்கலை செவிலியர் படிப்பு (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.  

வயது வரம்பு: 01.08.2026 அன்றைய நிலவரப்படி 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  

பணிச் காலம்: 11 மாத ஒப்பந்த அடிப்படையில் இப்பணி நிரப்பப்படும்.  

நிபந்தனைகள்:

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையிலானது என்பதால் எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தேர்வின் போது மருத்துவமனைக் குழுத் தலைவரின் முடிவே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்), வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ் / 10-ஆம் வகுப்பு / 12-ஆம் வகுப்பு சான்றிதழ்), கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், செவிலியர் பட்டயச் சான்று / பட்டச் சான்று, முகவரி மற்றும் இருப்பிடச் சான்று (ஆதார் அட்டை அல்லது வருவாய்த் துறையிடம் பெறப்பட்ட சான்றிதழ்), முன் அனுபவச் சான்று (இருப்பின்).  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:

தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பலாம்.  

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மருத்துவமனை கண்காணிப்பாளர்,
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை,
பத்மநாபபுரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.  

கடைசி நாள்: 27.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டும்.  

குறிப்பிட்ட தேதிக்குக்குப் பிறகு பெறப்படும் மற்றும் அரைகுறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES