Chennai High Court Jobs: சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள data entry operator பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்ங்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
| மாவட்டம் | காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை |
| சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு | 02 |
| அரியலூர் | 01 |
| சென்னை | 11 |
| செங்கல்பட்டு | 03 |
| கோயம்புத்தூர் | 04 |
| கடலூர் | 02 |
| தர்மபுரி | 02 |
| திண்டுக்கல் | 02 |
| ஈரோடு | 02 |
| கள்ளக்குறிச்சி | 04 |
| காஞ்சிபுரம் | 03 |
| கன்னியாகுமரி | 05 |
| கரூர் | 01 |
| மதுரை | 05 |
| மயிலாடுதுறை | 01 |
| நாகப்பட்டினம் | 02 |
| நாமக்கல் | 01 |
| நீலகிரி | 01 |
| பெரம்பலூர் | 02 |
| ராமநாதபுரம் | 01 |
| புதுக்கோட்டை | 01 |
| சேலம் | 04 |
| சிவகங்கை | 01 |
| தென்காசி | 02 |
| தஞ்சாவூர் | 03 |
| தூத்துக்குடி | 06 |
| திருச்சிராப்பள்ளி | 05 |
| திருநெல்வேலி | 05 |
| திருப்பத்தூர் | 01 |
| திருவாரூர் | 04 |
| திருவண்ணாமலை | 04 |
| திருவள்ளூர் | 06 |
| திருப்பூர் | 02 |
உள்ளிட்ட மாவட்டங்களில் data entry operator பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி, சம்பளம்
நீதிமன்றங்களில் data entry operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்ள் B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT) படித்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் data entry operator பணிக்கு எழுத்துத்தேர்வு, skill test, viva மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 25 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் 10 மதிப்பெண் கட்டாயம் பெற வேண்டும். Skill test தேர்வு 25 மதிப்பெண்களுக்கு நடைபெற வேண்டும். இதில் குறைந்தது 10 மதிப்பெண்கள் பெற வேண்டும். Viva Voce தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் குறைந்தது 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
மேற்கண்ட பணிக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உங்கள் விவரங்களை சமர்ப்பித்த பிறகு, அதனை மீண்டும் எடிட் செய்ய முடியாது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.