SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுரை: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Madurai Government Job: மதுரை மாவட்டத்தில் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 30ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 26, 2026, 03:44 PM IST | Updated: Oct 26, 2026, 04:02 PM IST
Join

Madurai Government Job: மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி

உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் என 3 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அறிவியல், கலை, வணிகம், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

0.2.3 அல்லது 11.1.3 கல்வி முறையில் படித்திருக்க வேண்டும். உதவியாளர் பணியிடத்திற்கான நேரடி நியமனத்தில், தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் Computer on Office Automation"தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அல்லது இந்திய ஒன்றியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கணினி தொடர்பான டிப்ளமோ /பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: டிகிரி போதும்.. 232 அப்ரண்டிஸ் பணியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது?

இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.  அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பணிகளுக்கு 42 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கான தேர்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்டத் தேர்வுக் குழு மூலம் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள், வயது வரம்பு, அனுபவம், ஆவண சரிபார்ப்பு மற்றும் பிற பொதுத் தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும், பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு முன் தேவையான காவல்துறை பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து, கல்வி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 30.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

நிபந்தனைகள்

மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமானதாகும். மேற்கண்ட பணியிடத்திற்கு பணியமர்த்தப்படும் பணியாளர் நிர்வாகக் காரணங்களுக்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு உட்பட்டவராக உள்ளார். மேற்கண்ட பணியிடத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணிக்கான எவ்வித உரிமை கோரலையும் பணியாளர் கொண்டிருக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES