• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?

ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?

10வது வரை படித்திருக்கிறீர்களா? உங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை இருக்கு! இதற்கான தகுதிகள் என்ன? முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 09, 2026, 13:52 IST|Updated: Sep 09, 2026, 14:01 IST
joinshare
ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit: TN Jobs | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.9.2026 ஆகும். இந்த வேலைக்கான முழு தகுதி மற்றும் விவரத்தை இங்கு பார்க்கலாம்.

பணியின் பெயர்: பதிவரை எழுத்தர் (Record Clerk)

காலிப்பணியிடங்கள் : 1
தேவையான கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : ஆதி திராவிடர்/ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு, 18 முதல் 37 வரை இருக்க வேண்டும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் ஆதிதிராவிடர்களுக்கு வயது 18 முதல் 55 வரை இருக்க வேண்டும். இதில், வேறு எந்த அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மேற்கண்ட வயது சலுகையை, பெற இயலாது.
சம்பளம் : ரூ.15,900 முதல் 58,600 வரை

தேர்வு செய்யப்படும் முறை என்ன?

இந்த பணியிடங்களுக்கு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://nilgiris.nic.in/notice_category/recruitment/ எனும் தளத்தில், Recruitment எனும் பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

பதிவிறக்கிய விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளிட்டு தேவையாண ஆவணங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சிப்பிரிவு, உதகமண்டலம் - 643001

விண்ணப்ப கட்டணம் : ஆதி திராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ரூ.50 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பு : விண்ணப்பத்தாரர்கள், விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (வளர்ச்சி) பெயரிலான இந்தியன் வங்கி கணக்கு எண் (Indian Bank Account Number: 8038019227)
(IFSC Code. IDIB000S004) ற்க் செலுத்தி, அதற்கான ரசீதினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் எப்போது?

இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள், 29.09.2026 ஆகும்.

நிபந்தனைகள் என்னென்ன?

  • விண்ணப்பத்தாரர்கள், தங்களின் விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் படிவத்தில் பூர்த்தி செய்து, 29.09.2026 அன்று, பிற்பகல் 5.45 மணிக்குள்ளாக, நேரில் கீழ்க்காணும் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • விண்ணப்பத்தாரர், தன்னுடைய கல்வித்தகுதி, சாதிச்சான்று, வயது ஆதார சான்று ஆகியவைகளுக்கான ஆதாரங்களின் நகல்களை, சுய சான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும். இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • கட்டணம் செலுத்திய ரசீதை இணைத்திருக்க வேண்டும்.
  • எந்த விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன அலுவலருக்கு உண்டு.
  • தகுதியிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பப்படும்.
  • மேலும் விவரங்களுக்கு https://nilgiris.nic.in/notice_category/recruitment/ தளத்தில் இருக்கும் பணி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளவும்.
Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu