மேற்குவங்கத்தில், சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனம், இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது, மின்சார ரயில் இன்ஜின்களை இந்திய ரயில்வேக்காக தயாரித்து கொடுத்து வருகிறது. இந்த நிறுவனம், 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது, உலக அளவில் மிகப்பெரிய ரயில் இன்ஜின் தயாரிப்பு நிலையங்களுள் ஒன்றாக இருக்கிறது. இந்த நிறுவனம்தான், விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. இதற்கு, தகுதியுடையவர்கள், ஆர்வம் இருந்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: GMA/Recct & MPP/Sports Quota / 2026-27
பணி: Sports Person (Sports Quota 26-27)
காலி பணியிடங்கள்: 25
வயது வரம்பு என்ன: 1.1.2026 தேதியின் படி, விண்ணப்பதாரருக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாதம் ரூ.5,200ல் இருந்து, 20,200 வரை இருக்கும். (கூடுதலாக தகுதி பெற்றிருப்பவர்களுக்கு கிரேட் பே கூடுதலாக வழங்கப்படும்)
தகுதி : பண்ணிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய கல்வித்தகுதியுடன், காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில், தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி, குறைந்தது 3வது இடமாவது பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், என்னென்ன விளையாட்டு தகுதிகளை பெற்றிருக்க வேண்டுமென முழு விவரங்கள் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து, படித்து தெரிந்து கொள்ள விண்ணப்பத்தாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் செய்வோர், 1.4.2024 விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதி, மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக, விளையாட்டுத்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். இது குறித்த விவரம், மின்னஞ்சள் மூலமாக தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், ரயில்வேயில் கிளார்க் பணியில் பணியமர்த்தப்படுவர்.
பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவினர், EWS பிரிவினர் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கூடவே SC, ST, மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினருக்கான விண்ணப்பக்கட்டணம், ரூ.250 கட்டணத்தை, PFA, Chittaranjan Locomotive works, Chittaranjan எனும் முகவரிக்கு ஐபிஓ ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.
www.clw.indianrailways.gov.in எனும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து Chief Personnel Officer, Administrative Building, Chittaranjan Locomotive Works, PO-Chittaranjan, District Paschim Bardhaman, West Bengal, PIN: 713 331. எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் செய்பவர்கள், தங்களது விண்ணப்பங்களை 20/08/2026 ஆகும்.