PM Yasavi Scheme: தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிரதம மந்தியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே, இதற்கு தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தென்காசி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி 2 L (PM YASASVI-Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) அறிவிக்கப்பட்டுள்ள (Top class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் -12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை (புதுப்பித்தல்/புதியது) திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ. 75,000/- மற்றும் 11 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ. 1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025. 26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பித்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Schoalrship Portal - (https://scholarships.gov.in)) 5 (Renewal) की உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 31.10.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான ( புதுப்பித்தல்) கடைசி நாள் 15.11.2026 ஆகும். 2026-27 புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in மற்று மத்திய அரசின் சமூகநிதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) அறிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் தென்காசி, தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.