• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /தமிழில் எழுத, படிக்க தெரியுமா? கைநிறைய சம்பளத்துடன் வேலை.. தமிழக அரசின் அறிவிப்பு

தமிழில் எழுத, படிக்க தெரியுமா? கைநிறைய சம்பளத்துடன் வேலை.. தமிழக அரசின் அறிவிப்பு

District Jail Jobs: கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறை/கிளைகளில் காலியாக உள்ள தூய்மை பணியார்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 27, 2026, 10:28 AM IST|Updated: Sep 27, 2026, 10:51 AM IST
joinshare
தமிழில் எழுத, படிக்க தெரியுமா? கைநிறைய சம்பளத்துடன் வேலை.. தமிழக அரசின் அறிவிப்பு
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

3

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

4

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

5

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

District Jail Jobs: தமிழகத்தில் மாவட்ட வாரியாக பல்வேறு துறைகிளல் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட சிறை / கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 06 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் வேலை

கோயம்புத்தூர் மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட சிறை / கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 06 தூய்மைப் பணியாளர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு கீழ்க்கண்ட விபரப்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி, சம்பளம்

கோயம்புத்தூர் மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட சிறை / கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு தமிழில்  எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவை தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு கல்வித்தகுதியும் கிடையாது. தூய்மை பணியளர் பணிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக தான் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என கூறுவார்கள்.  

காலிப் பணியிடங்களின் விவரம்

வ.எண்காலியாக உள்ள சிறைகாலிப் பணியிடம்வகுப்பு
1.கிளைச்சிறை, பொள்ளாச்சி01SC
2.கிளைச்சிறை, பல்லடம்
 
01SC
3.கிளைச்சிறை, தாராபுரம்
 
01BC (OBCM)
4.கிளைச்சிறை, உடுமலைப்பேட்டை
 
01BCM
5.கிளைச்சிறை, பெருந்துறை
 
01MBC (DNC)
6.கிளைச்சிறை, உதகை01GT

வயது விவரம்

  • கிளைச்சிறை, பொள்ளாச்சி, பல்லடம் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கிளைச்சிறை, தாராபுரம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை ஆகிய பணியிடத்திற்கு  32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கிளைச்சிறை, உதகை பணியிடத்திற்கு 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிப்பது எப்படி?

சிறையில் தூய்மை பணியாளர்கள் பிண்ககு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்மந்தப்பட்ட சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் சிறைகண்காணிப்பாளர், மத்தியசிறை, கோயம்புத்தூர்-18 என்ற முகவரியிட்டு 05.10.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் கோயம்புத்தூர் மத்தியசிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.  விண்ணப்ப படிவத்தை erode.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேற்கண்ட பணியிடத்தினை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேர விபரம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu