8வது வகுப்பு முதல் டிகிரி வரை: கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் சூப்பர் வேலை, நோட் பண்ணுங்க
Coimbatore District Recruitment News: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் (ம) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Coimbatore District Recruitment News: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரம், விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பிற தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குநர், குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் (ம) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.09.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்
| அம்சம் | விவரம் |
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை (ஒப்பந்த அடிப்படையில் பணி) |
| காலியிடங்கள் | 87 |
| பணியிடம் | கோவை, தமிழ்நாடுவ் |
| விண்ணப்ப செயல்முறை தொடங்கிய நாள் | 18.08.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.09.2026 |
மேலும் படிக்க | TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான தொகுப்பூதியம், வயது வரம்பு, கல்வித் தகுதி ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.
1. ஆய்வகத் தொழில்நுட்புநர் நிலை-III: Lab Technician Gr-III
பதவி: ஆய்வக தொழில்நுட்புநர் நிலை-III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.17,000
வயது: 35 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி: மருத்துவக் கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் CMLT/DMLT.
2. தொழில்சார் சிகிச்சையாளர்: Occupational Therapist (DEIC)
பதவி: தொழில்சார் சிகிச்சையாளர் (DEIC)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயது: 40 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற தொழில்சார் சிகிச்சை இளங்கலை/முதுகலைப் பட்டம்.
3. மாவட்ட திட்ட மேலாளர்: District Programme Manager
பதவி: மாவட்ட திட்ட மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.42,000
வயது: 59 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் இளங்கலைப் பட்டம் (BAMS).
- பொது சுகாதாரத் துறையில் அனுபவமுள்ள நிறுவனங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
- சமூகத் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அரசு முன்னெடுப்புகள் குறித்த அறிமுகம்/அனுபவம் (தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலானவை).
- எம்.எஸ். ஆஃபீஸ், எம்.எஸ். வேர்ட், எம்.எஸ். பவர்பாயிண்ட், எம்.எஸ். எக்செல் உள்ளிட்ட கணினி அறிவு.
- ஆயுஷ் பிரிவில் முதுகலைப் பட்டமும், ஆயுஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் பணி அனுபவமும் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. RMNCH+A கவுன்சிலர்: RMNCH+A Counsellor (பெண் விண்ணப்பதாரர் மட்டும்)
பதவி: RMNCH+A கவுன்சிலர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.21,000
வயது: 40 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி:
- சமூகப் பணி / பொது நிர்வாகம் / உளவியல் / சமூகவியல் / மனையியல் / மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை அல்லது இளகலை பட்டம்.
- சுகாதாரத் துறை / தொடர்புடைய துறையில் 1-2 வருட பணி அனுபவம்
5 உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்/DEO: Assistant cum Data Entry Operator
பதவி: உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயது: 35 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி அறிவு.
- ஓராண்டு அனுபவம் விரும்பத்தக்கது.
6. ULB-UHN/ANM
பதவி: ULB-UHN/ANM
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.17,500
வயது: 35 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி:
- மேல்நிலைப் பள்ளித் தேர்விலும், பொது சுகாதாரத் துறையால் (DPH) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இரண்டு வருட ANM படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7 சுத்தம் செய்பவர்: Cleaner
பதவி: சுத்தம் செய்பவர்
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.11,000
வயது: 35 வயதுக்கு கீழ்
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிய வேண்டும்)
நிபந்தனைகள்:
- இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் இணையும் போது பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) மற்றும் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர்-18
குறிப்பு:
1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
2. விண்ணப்ப படிவங்கள் https://Coimbatore.nic.in என்ற இணையதள முகவரியில் பதவிறக்கம் செய்யலாம்.
3. மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்போது கீழ்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்:
- விண்ணப்பம்
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
- முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் தெளிவாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- சுயசான்றொப்பமிட்ட கல்வித்தகுதிக்கான சான்றின் (ம) மதிப்பெண் சான்றின் நகல்.
- சுயசான்றொப்பமிட்ட சாதிச்சான்றின் நகல்.
- சுயசான்றொப்பமிட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல் (குடும்பஅட்டை / ஆதார்அட்டை)
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள் தேதிக்கு பின்னர் பெறுப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.