TN Govt Education Assistance Scheme: தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்காக தமிழக அரசு உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக சமூகநிதித்துறை அமைச்சர் வன்னிஅரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணங்களை உதவித்தொகையாக வழங்குவது போன்று, சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முதல் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கட்டாய மற்றும் திரும்ப செலுத்தப்படாத கட்டணங்களின் (Compulsory Non-refundable fees) கல்வி உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது!
மேலும் இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால்… https://t.co/KLpVUY3mpI— வன்னி அரசு (@VanniTamizhVCK) September 15, 2026
மேலும், இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும் (Undergraduate Courses), 10 முதுகலை படிப்புகளும் (Post Graduate Courses), 2 பட்டய படிப்புகளும் (Diploma) சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையினால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, அரசு / அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில், அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏற்கனவே அரசால் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டு வரும்.
அனைத்துக் கட்டாய மற்றும் திரும்பப் செலுத்தப்படாத கட்டணங்களை (Compulsory Non-refundable fees) கல்வி உதவித்தொகையாக வழங்குவது போன்று, சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்களில், அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் பயிலும், பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பான ரூ.2,50,000க்கு உட்பட்ட அம்மாணாக்கர்களுக்கு, அனைத்துக் கட்டாய மற்றும் திரும்பப் செலுத்தப்படாத கட்டணங்களும் (Compulsory Non-refundable fees) கல்வி உதவித்தொகையாக வழங்குமாறு தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.