SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிகிரி, 10, 12 படித்தவர்களுக்கு சேலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

Salem District Recruitment News: சேலம் மாவட்டம் ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர் மற்றும் பெண் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 12, 2026, 12:10 PM IST | Updated: Aug 12, 2026, 12:20 PM IST
Join

Salem District Recruitment News: சேலம் மாவட்டத்தில் அற்புதமான வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்து பலன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழக்குப் பணியாளர் மற்றும் பெண் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.இளம்பகவத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம்

சேலம் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆத்தூர் வட்டத்தில் பிப்ரவரி 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 3 வழக்குப் பணியாளர்கள் (Case Worker) மற்றும் 1 பெண் காவலர் (Security Guard) பணியிடங்களை நிரப்ப கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

<caption>சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்</caption>
அம்சம்விவரம்
அபைப்புசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
பணியிடம்ஆத்தூர் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம்
விண்ணப்பம்www.salem.nic.in
விண்ணப்பிக்க கடைசி நாள்21 ஆகஸ்ட் 2026

சேலம் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம் மற்றும் அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

வழக்குப் பணியாளர்: Case Worker

முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

காவலர் (Security Gaurd)

முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் www.salem.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தங்களது சுய விபரங்களை 21.08.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வெண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்.
அறை எண்.126, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்
சேலம் - 636001

விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் இணைக்க வேண்டும்.

1) விண்ணப்பம்

2) விண்ணப்பத்தில் பாஸ்போட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும், முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

3) கல்வித்தகுதிக்கான சுயசான்று ஒப்பமிட்ட (Self-Attested) சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ் (10,12th Certificate)
பட்டப் படிப்புச் சான்றிதழ் (Degree Certificate)
கூடுதல் தகுதிச் சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று (Additional Qualification/Experience Certificate/Community Certificate/ID Proof and Address Proof)

4) நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES