திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... எப்படி விண்ணபிப்பது?
Dindigul District Recruitment News: திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Dindigul District Recruitment News: திண்டுக்கல் மாவட்டம், குழந்தைகள் நலம் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் இளைஞர் நீதிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற விதி 2015ன் அடிப்படையில் கல்வித்தகுதியும், மிஷன் வத்சால்யா வழிகாட்டுதலின் அடிப்படையில் வயது வரம்பும், ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
காலிப்பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, தொகுப்பூதிய ஆகியவற்றின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
1. உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர்: Junior Assistant cum Record Clerk
பதவி: உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தொகுப்பூதியம்: மாதம் ரூ.20,000
கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அலுவலக உதவியாளர்: Office Assistant
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
தொகுப்பூதியம்: மாதம் ரூ.13,000
கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு (VIII) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய குறிப்பு
- விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.dindigul.nic.in -இலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, வயதுக்கான சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களை இணைக்க வேண்டும்,
- இப்பதவிகளுக்கு தகுதியுள்ள நபர்கள், பூர்த்து செய்யப்பட்ட விண்ணப்பம், சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றை விளம்பரம் வெளியிடப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் (12.10.2026 மாலை 05.30 மணிக்குள்) கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
- இக்காலிப்பணியிடம் முற்றிலும் தற்காலிகப் பணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- மேற்காணும் பணியிடத்திற்கு எதிர்காலத்தில் நீதிமன்றத்திலோ அல்லது வேறு அமைப்பிலோ நிரந்தர உரிமை கோரிட இயலாது.
- தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம்,
பிளசிங்ஸ்,
பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி),
எஸ்.பி.ஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்),
திண்டுக்கல்-624 004
தொலைபேசி எண்: 0451 - 2904070
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை: பல்வேறு காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க