SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு, உடனே அப்ளை பண்ணுங்க

Chengalpattu Recruitment News: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பூதியம், வயது வரம்பு ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 10, 2026, 11:09 IST | Updated: Sep 10, 2026, 11:16 IST
Image Credit: Representative / Chengalpattu Recruitment News
Join

Chengalpattu Recruitment News: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்தில் கூடுதலாக பணியாற்றிட உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர் (Assistant cum Bench Clerk), இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர் (Junior Assistant Cum Record Clerk) மற்றும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை கீழ் குறிப்பிட்டுள்ள விவரப்படி தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு: முக்கிய அம்சங்கள்

அம்சம்விவரம்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு (தற்காலிக வேலை)
காலியிடங்கள்03
பணியிடம்செங்கல்பட்டு, தமிழ்நாடு
விண்ணப்ப செயல்முறை தொடக்க நாள்08.09.2026
விண்ணபிக்க கடைசி நாள்22.09.2026

மேலும் படிக்க | 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 2,536 காலியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க

இந்த காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, தொகுப்பூதியம், வயது வரம்பு ஆகிய அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

1. Assistant cum Bench Clerk

பதவி: உதவியாளருடன் கூடிய அமர்வு எழுத்தர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.25,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி:

2. Junior Assistant Cum Record Clerk

பதவி: இளநிலை உதவியாளருடன் கூடிய பதிவேடு எழுத்தர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி:

மேலும் படிக்க | ஊரக வளர்ச்சித்துறையில் வேலை! 10வது வரை படிச்சிருந்தா போதும்..எப்படி விண்ணப்பிப்பது?

3. Office Assistant

பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
ஊதியம்: மாதம் ரூ.13,000
வயது வரம்பு: 42 வயதுக்குக் கீழ்

கல்வி தகுதி

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியே விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றின் நகல்களுடன் 2209.2026 அன்று மாலை 5.45 க்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண்.F0-06. தரை தளம். F. Block,
புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்.
செங்கல்பட்டு 603 111

தொலைபேசி: 6382613173 மற்றும் 9789422159

அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே காணலாம்.
விண்ணப்பங்களை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | மாதம் ரூ.58,000 சம்பளம்! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES