• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /செவிலியர் காலிப் பணியிடங்கள் 4,724 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

செவிலியர் காலிப் பணியிடங்கள் 4,724 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Tamil Nadu Nurse Recruitment 2026: செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 4,724 நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 12, 2026, 10:54 AM IST|Updated: Sep 12, 2026, 10:59 AM IST
joinshare
செவிலியர் காலிப் பணியிடங்கள் 4,724 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Image Credit: Tamil Nadu Nurse Recruitment

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

2

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained

3

30,000 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம் – 'வெற்றி மகளிர்' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு!

4

தொடரை வென்ற இந்திய ஓடிஐ அணி... நியூசிலாந்து மண்ணில் விடைபெற்றனர் RO-KO

5

Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Nurse Recruitment 2026: தமிழக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவ மையங்களில் சிகிச்சை பணிகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தேசிய நல்வாழ்வு குழுமத்தின் (National Health Mission - TN) கீழ் காலியாக உள்ள 4,724 ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக இந்த நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

எந்தெந்தத் துறைகளின் கீழ் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன?

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் இயங்கும் மருத்துவ நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வித்தகுதி: இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு உதவிபெறும்/அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளில் GNM அல்லது B.Sc Nursing படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பதிவு: தமிழ்நாடு நர்சிங் மற்றும் மருத்துவச்சி கவுன்சிலில் கட்டாயமாகச் செல்லுபடியாகும் பதிவு வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த தகுதியான செவிலியர்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான nhm.tn.gov.in என்ற முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான கல்வி மற்றும் பதிவுச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்தின் செயல் செயலாளருக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 25, 2026, மாலை 5:00 மணி வரை.

2 மாவட்டங்களுக்குப் பொருந்தாது

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தினால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியுடைய செவிலியர்கள் மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்களை இணையதளத்தில் அறிந்து உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu