• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.58,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.58,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Thanjavur Govt Jobs: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 28, 2026, 11:21 IST|Updated: Sep 28, 2026, 11:32 IST
joinshare
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை.. மாதம் ரூ.58,000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thanjavur Govt Jobs: தமிழக அரசு மாவட்ட ரீதியாக தற்காலிக அடிப்படையில் பணிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் பொருளியியல் மற்றும புள்ளியியல் துறை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்  மாவட்ட வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, புள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

அரசு விதிகளின்படி, தஞ்சாவூர் மாவட்டம், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை, புயல் இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் அலுவலக நடைமுறைப் பணிகளை உதவிடுதல் போன்ற வேலை இருக்கும்.

ஊதியம், தகுதிகள்

அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.15700 முதல் ரூ.58100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி,  சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

  • இதர வகுப்பினர் (OC) 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (BC, BCM, MBC, DNC) 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (SC, SCA, ST, DW) 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • முன்னாள் ராணுவ வீரர்கள் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முன்னுரிமை இனமாக தமிழக அரசு பள்ளியில் தமிழ்மொழியில் கட்டாயம் பயின்றவராக இருத்தல் வேண்டும். மேலும் தமிழ்மொழியில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் thanjavur.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து அக்டோபர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை தபால் மூலமாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

புள்ளி இயல் துணை இயக்குநர், 
புள்ளிஇயல் துணை இயக்குநர் அலுவலகம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 
தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல்
தஞ்சாவூர் - 613 010

முக்கிய குறிப்பு

பணி நியமனம் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கபடும் மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, தஞ்சாவூர் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் மேற்படி பணியிடத்திற்கு எழுதுத்துத் தேர்வு நடத்தப்படும் 6T60T தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்காணும் நேர்வில் கலந்துகொள்ள வந்து செல்லும் பயணப்படி வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது,

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu