• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Thoothukudi Govt Job: தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Written ByUmabarkavi K
Published: Oct 04, 2026, 08:52 AM IST|Updated: Oct 04, 2026, 09:32 AM IST
joinshare
பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய  சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!

வாகன ஓட்டிகளே அலர்ட்.. சென்னையில் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்!

2

பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

3

Flydubai விமான காக்பிட்டில் நடந்தது என்ன? - தாக்கப்பட்ட இந்திய விமானியின் வாக்குமூலம்

4

முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ

5

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Thoothukudi Govt Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக தற்காலிக பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்காலிக வேலை என்றாலும், இதற்காக கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ

காலிப் பணியிடங்கள் விவரம்

வட்டாரம்  
 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
ஆழ்வார்திருநகரி 03
கருங்குளம் 01
ஸ்ரீவைகுண்டம் 02
சாத்தான்குளம் 02
உடன்குடி   01
கயத்தார் 03
கோவில்பட்டி   03
ஓட்டப்பிடாரம்   02
புதூர்    03
விளாத்திகுளம்  02
மொத்தம் 22 காலிப் பணியிடங்கள்

கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணிணி MS Office குறைந்த பட்சம் 3 மாத சான்றிதழ் படிப்பு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது Computer Science (OR) Computer Application ல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • கணிணி மென்பொருள் சார்ந்த கல்வித்தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இருசக்கர வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • வயது வரம்பானது 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கான உதவித்தொகை அப்டேட்! இறுதி வாய்ப்பு

மாத சம்பளம்

இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.12000, பயணப்படியாக ரூ.750 என மொத்தமாக ரூ.12750 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அரசு வேலை நாட்களில் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மாவட்ட ஆட்சியரகம் (இரண்டாம் தளம்), கோரம்பள்ளம் -628101 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் பதிவு தபால் மூலமாக 16.10.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

  • விண்ணப்பதார் தூத்துக்குடி மாவட்டத்தில் காலிப்பணியிட வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்
  • கல்வித்தகுதி இருப்பிடம், ஜாதி சான்று, நன்னடத்தை சான்று, கணிணி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்ட விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  • தகுதியில்லாத நிராகரிக்கப்படும் மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள்.
  • எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
  • தேர்வு/நேர்காணலில் கலந்து கொள்ள பயணப்படி ஏதும் வழங்கப்படாது
  • தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு தேர்வு /நேர்காணல் நடைபெறும் தேதி தனியே தெரிவிக்கப்படும்
  • நியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு. 

மேலும் படிக்க: பெண் தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் தரும் தமிழக அரசு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu