• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tirunelveli Govt Job: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதி, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 01, 2026, 03:15 PM IST|Updated: Nov 01, 2026, 03:42 PM IST
joinshare
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

EPFO: இனி கிளைம் செய்ய தேவையில்லை... PF பணம் தானாகவே வங்கி கணக்கிற்கு வரும்! Explained

2

CM Health Insurance Scheme: ஏழைகளுக்கு இனி ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம்! Explained

3

கடன் வாங்கிவிட்டு பணிமாறுதலில் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செக்!

4

செஞ்சி ஹேமாவதி... காக்கிநாடாவின் ஞானேஸ்வரி... மாயமான 2 சிறுமிகளும்; தொடரும் மர்மங்களும் Explained

5

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tirunelveli Govt Job: தமிழகத்தில் மாவட்ட வாரியாக தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில்  பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) திருநெல்வெலி மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றது. 

அதில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையம் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும், அவர்களின் பாதுகாப்பிற்கான உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிடவும் செயல்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க: மாதம் ரூ.63000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் சூப்பர் வேலை.. முழு விவரம்

மேற்கண்ட மையத்தில் கணக்கியல் உதவியாளர் (Account Assistant) மற்றும் தரவு நுழைவு பணியாளராக (Data Entry operator) பணிபுரிய கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள், திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

1) தகவல் தொழில்நுட்ப பணியாளர்

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை - 1

கல்வித்தகுதி - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் diploma in computer/IT-ல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாநில அல்லது மாவட்ட அளவில் அரசு அல்லது அரசு சாரா/தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்களில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணப்படுத்தல், இணைய அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் மற்றும் காணொளிக் கலந்துரையாடல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம்.

மாத சம்பளம் - ரூ.20,000

2) பல்நோக்கு உதவியாளர்

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை - 2 (நெல்லை, வள்ளியூர்)

கல்வித்தகுதி - இந்த பணிக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஒரு வருட பணி முன்அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.10,000

3) கணக்கியல் உதவியாளர்

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை- 1

கல்வித்தகுதி - கணக்கியல் பாடத்தை கொண்டு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு/பட்டயம் மற்றும் 3 வருடம் அரசு, தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் கணக்கியல்  பிரிவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.20,000

4) தரவு நுழைவு பணியாளர்

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை -1

கல்வித்தகுதி - இந்த பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு இருக்க வேண்டும். மேலும், 3 வருடம் அரசு, தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் துறைகளில் தகவல் தொழில் நுட்பத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

மாத சம்பளம் - ரூ.20,000

மேலும் படிக்க: போட்டித் தேர்வர்களுக்கான அப்டேட்! தமிழ்நாடு அரசின் 5 ஆண்டு வயது தளர்வு யாருக்கு கிடையாது? Explained

நிபந்தனைகள்

  • பல்நோக்கு உதவியாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளார் பணியிடத்திற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • மேற்காணும் பணியிடங்களுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார்நிலையில் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம், மாவட்ட சமூநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மணிமுத்தாறு வளாகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் வாளகம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை நவம்பர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை ESIC அலுவலகத்தில் வேலை, சூப்பரான சம்பளம்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu