SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8ம் வகுப்பு படித்தவரா? மாதம் 25,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

Tirunelveli Govt Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 05, 2026, 01:24 PM IST | Updated: Oct 05, 2026, 01:40 PM IST
Join

Tirunelveli Govt Jobs: தமிழக அரசு துறை சார்ந்து பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் 1, இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் - 1 மற்றும் அலுவலக உதவியாளர் - 1 ஆகிய பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்க: வெற்றி பயணத் திட்டம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு.. குஷியில் பெண்கள்!

உதவியார் மற்றும் அமர்வு எழுத்தர் பணியிடம்

திருநெல்வேலி இளைஞர் நீதிக்குழுமத்தில் உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.09.2026 அன்ற 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட 1 பல்கலைக்கழகம் ஒன்றில் 10+2+3 அல்லது 11+1+3 என்ற கல்வி முறையில் அறிவியல், கலை, வணிகவியல், பொறியயல், மருத்துவம் அல்லது  வேற ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பக்கல்வி இயக்கத்தால் (Directorate of Technical Education) நடத்தப்படும் Computer on Office Automation பயிற்சியில் தகுதி பெற்றவர்களுக்கோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒன்றில் கணினி தொடர்பான பட்டயம் (Diploma) பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு /(Degree) முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர் பணியிடத்தில்  10ம் வகுப்பல் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 01.09.2026 அன்று 42 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும்.

மேலும் படிக்க: பத்திர பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! லைஃப் சர்டிபிகேட் காலவகாசம் Explained

அலுவலக உதவியாளர் பணியிடம்

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.09.2026 அன்று 42 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.13,000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்படிவத்தை www.tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 13.10.2026 அன்றுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரக்குளம்,
திருநெல்வேலி.
தொடர்பு எண்: 0462-2901953

நிபந்தனைகள்

இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒருவருடம் வரை நடப்பில் இருக்கும். மாத தொகுப்பூதியம் தவிர வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாட்கள் முடிவுற்ற பின்னர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த பணியானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES