• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /+2 படித்தவரா? மாதம் ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?

+2 படித்தவரா? மாதம் ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?

Tirunelveli Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவை துறையின் கீழ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 12, 2026, 09:50 AM IST|Updated: Oct 12, 2026, 10:01 AM IST
joinshare
+2 படித்தவரா? மாதம்  ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இடைத்தேர்தலில் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக? பனையூரில் பரபரப்பு

இடைத்தேர்தலில் அப்செட்.. உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கும் தவெக? பனையூரில் பரபரப்பு

2

ரூ.1 லட்சம் கோடி.. வாரந்தோறும் கடன் உதவி.. எப்படி பெறலாம்? கூட்டுறவுத்துறையின் ஜாக்பாட் அறிவிப்பு

3

+2 படித்தவரா? மாதம் ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?

4

Cordelia Cruise : நடுக்கடலில் நகரும் தீவு! கார்டெலியா சொகுசு கப்பல் பிரம்மாண்ட சிறப்பம்சங்கள்

5

பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை - நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tirunelveli Government Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் குழந்தை உதவி மையம் 1098-ல் ஆற்றுபடுத்துநர் 1 மற்றும் வழக்குப்பணியாளர் -1 பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் குழந்தை உதவி மையம் 1098-ல் ஆற்றுபடுத்துநர், வழக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த இரண்டு பணிகளுக்கான கல்வித்தகுதியை தெரிந்து கொள்ளுஙகள்

  • ஆற்றுபடுத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/உளவியல்/பொது சுகாதாரம்/ஆலோனை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது ஆலோசனை மற்றும் தகவல் தொடர்பு (Counselling and Communication) தொடர்பான முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • அனுபவம் - அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களில் (NGO) குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும். அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
  • வழக்கு பணியாளர் பணிக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    அவசர உதவி மையங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெருங்கும் TNPSC குரூப் 4 தேர்வு! தேர்வில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

வயது விவரம்

  • ஆற்றுபடுத்துநர், வழக்குப்பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பானது 42 வயது அல்லது 42 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • அவசர உதவி சேவை மையத்தில்  முன்னதாகவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்

  • ஆற்றுபடுத்துநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.23,000 வழங்கப்படும்.
  • வழக்கு பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த பணி. பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒருவருடம் வரை நடப்பில் இருக்கும். ஒப்பந்த ஊதியம் தவிர வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே ஊதியம் வழங்கப்படும். ஒரு மாத பணி நாட்கள் முடிவுற்ற பின்னர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை. இந்த பணியானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கான விண்ணப்படிவத்தை www.tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து 23.10.2026 அன்றுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0462-2901953 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க: சென்னையில் சூப்பர் வேலை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் 9 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu