• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /திருவள்ளூர்: மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

திருவள்ளூர்: மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Tiruvallur Jobs: திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாத ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 14, 2026, 08:44 PM IST|Updated: Sep 14, 2026, 08:55 PM IST
joinshare
திருவள்ளூர்: மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tiruvallur Jobs: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்தில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்திற்கு வழக்கு பணியாளார் 2 சைல்டு ஹெல்ப் டெஸ்க், திருவள்ளுர் இரயில் நிலையம், மேற்பார்வையாளர் 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட குழந்தைகள் உதவி மையம் வழக்கு பணியாளார்கள், பணியிடங்களின் எண்ணிக்கை இரண்டு ஆகும். வழக்கு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்விதகுதியை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/கணினி அறிவியல்/தகவல்தொழில்நுட்பம்/சமூகவியல் /சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினித் துறையில் தேர்ச்சி மற்றும் அவசர உதவி எண்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பட்டப்படிப்பை பொறுத்தவரை B.A in Social Work/ Computer Sciences/ Information Technology/Community Sociology/ Social Sciences படிப்பை முடித்திருக்க வேண்டும். அவசர மையங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.  வயது வரம்பை பொறுத்தவரை 42 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மாத ஊதியமாக ரூ.18,000  மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி, சம்பளம் விவரம்

சைல்டு ஹெல்ப் டெஸ்க் திருவள்ளுர் இரயில் நிலையம், மேற்பார்வையாளர், கல்விதகுதியை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/கணினி அறிவியல்/தகவல்தொழில்நுட்பம்/சமூகவியல் /சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினித் துறையில் தேர்ச்சி மற்றும் அவசர உதவி எண்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பட்டப்படிப்பை பொறுத்தவரை B.A in Social Work/ Computer Sciences/ Information Technology/Community Sociology/ Social Sciences படிப்பை முடித்திருக்க வேண்டும். அவசர மையங்களில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.  வயது வரம்பை பொறுத்தவரை 44 வயது மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மாத ஊதியம்- ரூ.21,000 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, D பிளாக், எண்.118, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளுர்- 602 001 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசி 044-27665595 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 21.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை https://tiruvallur.nic.in/ என்ற இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu