• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /கன்னியாகுமரி: ரூ.40 லட்சம் வரை கல்விக்கடன்.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

கன்னியாகுமரி: ரூ.40 லட்சம் வரை கல்விக்கடன்.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

TN Govt Education Loan Scheme: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரதாப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் ரூ.40 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Aug 25, 2026, 10:47 AM IST|Updated: Aug 25, 2026, 11:01 AM IST
joinshare
கன்னியாகுமரி: ரூ.40 லட்சம் வரை  கல்விக்கடன்.. தமிழக அரசின் ஜாக்பாட்  அறிவிப்பு.. எப்படி பெறலாம்?
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Kanyakumari District News: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டப்படிப்பினை உள்நாடு மற்றும் அயல்நாட்டில் பயில்வதற்காக NSFDC, NSTFDC, NSKFDC போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்று மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுவருகிறது. முழுநேர படிப்புகளுக்கான மாணவர்களுக்கு மிக குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கப்பட்டுவருகிறது.

ரூ.40 லட்சம் வரை கல்விக்கடன்

  • ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.40.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • பழங்குடியினர் மாணவர்கள் இந்திய நாட்டில் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • தூய்மை பணியாளர்கள் மாணவர்கள் இந்திய நாட்டில் கல்வி பயில ரூ.10.00 இலட்சம் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக ரூ.20.00 இலட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

எந்தெந்த படிப்புகளுக்கு கடன்?

  1. இளங்கலை (UG) படிப்புகள் - B.E, B.Tech, MBBS, முதலியன.
  2. முதுகலை (PG) படிப்புகள் - MBA, M.Tech, முதலியன.
  3. தொழில்முறை படிப்புகள் - சட்டம், மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைக்கும்.

வட்டி விகிதம்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு -6.5 சதவீதம், பழங்குடியின மாணவர்களுக்கு 6 சதவீதம், தூய்மை பணியாளர்களின் மாணவர்கள் இந்திய நாட்டில் கல்வி பயில்வதற்கு -6 சதவீதம், வெளி நாட்டில் கல்வி பயில -7 சதவீதம் மற்றும் இந்திய நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு -5.5 சதவீதம், வெளி நாட்டில் கல்வி பயில மாணவிகளுக்கு -6.5 சதவீதம் கல்விக்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://tel.tahdco.com மற்றும் https://newscheme.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக கடன் பெற விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்கு மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்து பயன்பெற்றுக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கன்னியாகுமரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கன்னியாகுமரி ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கடன் விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள்

  • மாணவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன், போட்டோ, முகவரி
  • குடும்ப ஆண்டு வருமானச் சான்றிதழ் (எண் மற்றும் தேதி / செல்லுபடியாகும் தன்மை)
  • பெற்றோரின் பெயர் மற்றும் முழுமையான அஞ்சல் முகவரி மற்றும் பின்கோடு
  • மாணவர் சமூகச் சான்றிதழ் (எண் மற்றும் தேதி)
  • மாணவர் பான் கார்டு (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)
  • பெற்றோர் பான் கார்டு (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)
  • உத்தரவாததாரர் ஆதார் அட்டை எண் (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)
  • பெற்றோர் ஆதார் அட்டை எண் (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)
  • மாணவர் ஆதார் அட்டை எண் (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)
  • பான் கார்டு (ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும்)

ஆகிய நகல்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிதி ஆவணங்கள்

100/- முத்திரைத் தாளில்பெற்றோர்உறுதிமொழி பத்திரம், ரூ.100/- முத்திரைத் தாளில் உத்தரவாததாரரின்(ஜாமீன்தாரர்) உத்தரவாதப் பத்திரம், ஐடி Income Tax படிவத்துடன் உத்தரவாததாரர் சம்பளச் சீட்டு, மாணவர் வங்கி கணக்கு எண் &பெயர் &கிளை (New IOB Account) - கல்விக் கடன் வங்கி கணக்கு- வேறு தேவைகளுக்கு பயன்படுத்தல் கூடாது. (Format Provide in our Education Loan Application)
கல்லூரி, விடுதி மற்றும் சம்பந்தப்பட்டவரிடமிருந்து கட்டண அமைப்பு, ரூ.200/- முத்திரைத் தாளில் குடும்ப உறுப்பினர்களின்சொத்துஉத்தரவாதப் பத்திரம் (சொத்து தொடர்பான உறுப்பினர்களின் கையொப்பம்மற்றும் கைரேகை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Education