SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கல்வித்தகுதி கிடையாது.. மாதம் ரூ.52,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. தமிழக அரசு அதிரடி

TN Government Abroad Job: ஐக்கிய அரபுநாடுகளில் பணிபுரிய தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எந்த ஒரு கல்வித்தகுதியை தேவையில்லை. இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 26, 2026, 11:54 IST | Updated: Nov 26, 2026, 12:15 IST
Join

TN Government Abroad Job: தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. தமிழக அரசே வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது.  வெளிநாட்டில் வேலை செய்வது அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் பெரும் கனவாக இருக்கிறது. இதனால், தனியார் ஏஜெண்டுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.  சில சமயங்களில் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன.  

வெளிநாட்டில் வேலை

இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், வெளிநாட்டில் திறன் சார்ந்த வேலைகளை பெறவும் தமிழக அரசு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாநில அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக வெளிநாட்டில் பணிபுரிய ஆட்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசு வெளிநாடு வேலை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: பெருநகர சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு: 130 காலியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்வித்தகுதி, சம்பளம் விவரம்

1) Electrician Assistant பணி

கல்வித்தகுதி: Electrical Assistant பணிக்கு ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது விவரம்: 22 முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 6 மாத பணி அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருமானம்: வெளிநாட்டில் Electrical Assistant  பணிக்கு மாத சம்பளமகா ரூ.32,000 முதல் ரூ.36,000 வரையும் வழங்கப்படும்.

2) Electrician பணி

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 மாத பணி அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: வெளிநாட்டில் Electrician பணிக்கு மாத சம்பளமாக ரூ.36,000 முதல் ரூ.52,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம்: Substation/Power Plant/ Industries-ல் பணி இருக்கும்.

மேலும் படிக்க: தமிழக அரசு வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.58,500 வரை சம்பளத்தில் வேலை

3) Electrical Fitter பணி

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 மாதம் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.52,000 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

அனைத்து பணிகளுக்கும் கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கூடுதல் சலுகைகள்

ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter  பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் overmclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy Photo)ஆகியவற்றை  டிசம்பர் 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044 22502267) அல்லது வாட்ஸ்ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு: +2 படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.40,000 வரை சம்பளம்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES