Madurai Jobs: தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் தமிழக அரசு துறை வாரியாக பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுதவாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, பதிவறை எழுத்தர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் (Scheduled Caste) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி அலகு, ஈப்பு ஓட்டுநர் நிலையில் காணப்படும் ஆதிதிராவிடர் (Scheduled
Caste) (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் ) பெண் - ஆதரவற்ற விதவை (முன்னுரிமை பெற்றவர்) குறைவு பணியிடத்திற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள 1 எண்ணிக்கையிலான ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து 11.09.2026 முதல் 10.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் முன்னாள் ராணுவத்தினர் 55 வயதுக்குள், மாற்றுத்திறனாளிகள் (ஆதிதிராவிடர்) 47 வயதுக்குள், ஆதிதிராவிடர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பமளாக ரூ.15700 முதல் ரூ.58,100 வழங்கப்படும்.
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 32 வயதுக்குள் (SC) இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் 42 வயதுககுள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 55 வயதுக்குள், மாற்றுத்திறனாளகிள் 52 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதியை பொறுத்தவரை, 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மோட்டர் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் வாகனங்களை மோட்டார் ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.
பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 37 வயதுக்குள் (SC) இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் 37 வயதுககுள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 55 வயதுக்குள், மாற்றுத்திறனாளகிள் 47வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதியை பொறுத்தவரை, 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15900 முதல் ரூ.50,400 வழங்கப்படும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.madurai.nic.in என்ற இணையதளம் அல்லது தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் (National Career Service Portal) www.ncs.gov.in ஆகியவற்றில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
2. இணைதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். அக்டோபர் 10 பிற்பகல் 5.45 மணிக்குள் உசிலம்பட்டி, திருமங்கலம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை எண். 303, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் -11.10.2017, அரசாணை எண். 305, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் - 13.10.2017, அரசாணை எண். 306, நிதி (ஊதியக்குழு) துறை, நாள் - 13.10.2017 மற்றும் அரசாணை எண். 90 நிதி (ஊதியக்குழு) துறை, நாள் -26.02.2021-ன்படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர படிகளும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.