• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. முழு விவரம்

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. முழு விவரம்

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்டம்பர் 9) கடைசி நாளாகும். எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 08, 2026, 08:47 IST|Updated: Sep 08, 2026, 08:56 IST
joinshare
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. முழு விவரம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNPSC Group 2 Exam: தமிழக அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பி வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, குரூப் 1, குரூப் 2, குரூப 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முதல்நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.

நவம்பரில் குரூப் 2 தேர்வு

ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட்ட தகவலின்படி, குரூப் 2 பிரிவில் 41 இடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 780 இடங்களும் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்பிறகு, குரூப் 2 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குரூப் 2 தேர்வுக்கு கூடுதலாக 2 இடங்களும், குரூப் 2ஏ தேர்வுக்கு 23 இடங்களும் கூடதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குரூப் 2 மொத்த இடங்கள் 43 ஆகவும், குரூப் 2ஏ பணியிடங்களும் 803 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி அறிவிப்புகள்! அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

ஓட்டுமொத்தமாக பணியிடங்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 1, 2026 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஓஎம்ஆர் (OMR) முறையில் நடைபெறும்.

பணியிடங்கள் விவரம்

உதவி ஆய்வாளர், தமிழ்நாடு வணிகவரித்துறையில் துணை வணிகவரி அதிகாரி, வேலைவாய்ப்பு துறையில் ஜூனியர் அசிஸ்டன்ட் ஆபிஸர், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட 14 பதவிகளில் காலியாக 42 பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.

மேலும், பால்வளத்துறையில் மூத்த ஆய்வாளர், கூட்டுறவுத்துறையில் மூத்த ஆய்வாளர், அமைச்சக பணியில்  ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி துறையில் ஆய்வாளர், அறநிலையத்துறையில் செயல் அலுவலர், மீன்வளத்துறையில் உதவியாளர், தலைமைச் செயலகத்தில் உதவியாளர், சட்டப்பேரவையில் கிளார்க் உள்ளிட்ட 44 பதவிகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களுக்கு குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் படிக்க: டிகிரி படித்தவரா? கிராம வங்கியில் 464 காலிப் பணியிடங்கள்.. மாதம் ரூ.80,000 சம்பளம்!

விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ஆம் தேதி (நாளை) கடைசி நாளாகும்.  விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு செப்டம்பர் 13 முதல் செப்டத்பர் 15ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வுக்கு  மட்டும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.  

விண்ணப்ப கட்டணத்தை நெட் பேக்கிங், டெபிட், கிரெடிட் கார்டு? கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலமாகவும் நேரடியாகச் செலுத்தலாம்.   குரூப் 2 தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் அறிவுறுத்தப்படுகிறது

மேலும் படிக்க: சிவகங்கை: மாதம் ரூ.58,000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu