• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சென்னையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 17, 2026, 03:30 PM IST|Updated: Sep 17, 2026, 03:37 PM IST
joinshare
10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Image Credit: Tamil Nadu government

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government : தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" (AI App Development) குறித்த மூன்று நாள் முழுநேர நேரடிப் பயிற்சியை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள இந்நிறுவன வளாகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 25 வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பயிற்சி நடைபெறவுள்ளது.

பயிற்சியின் நோக்கம் மற்றும் உள்ளடக்கங்கள்:

பங்கேற்பாளர்கள் தங்களது புதிய யோசனைகளை நடைமுறைக்கு உகந்த AI புரோட்டோடைப்களாக (AI Prototypes) மாற்றிக் கற்பிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். முன்னணி ஸ்டார்ட்-அப்கள் பயன்படுத்தும் No-Code / Low-Code AI கருவிகள், வழிகாட்டியுடன் கூடிய செயல்முறைப் பயிற்சிகள் மூலம் படிப்படியாகக் கற்பிக்கப்படும்.

இதில் ChatGPT, Gemini Pro, NotebookLM, Lovable மற்றும் பிராம்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering) முறைகள் மூலம் நேரடிப் பயன்பாட்டுச் செயலிகள், இணையதளங்கள் மற்றும் தொழில்துறைத் தேவைகளுக்கான தானியங்கி முறைகளை உருவாக்கும் உத்திகள் பயிற்றுவிக்கப்படும். மேலும், கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சில்லறை வணிகம் போன்ற துறைகளுக்கான பயன்பாட்டு மாதிரிகள் மற்றும் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் 'AI MVP' உருவாக்கம், முதலீட்டாளர்கள் முன் தங்களது செயலிகளைச் சமர்ப்பிக்கும் திறன்கள் ஆகியவை குறித்தும் கற்றுத்தரப்படும்.

யாருக்கெல்லாம் பயனுள்ளது?

மாணவர்கள், புதிய தொழில் நிறுவனர்கள், தொடக்க நிலைத் தொழிலாளர்கள், புராடக்ட் மேனேஜர்கள் மற்றும் தனிநபர் தொழில் முனைவோருக்கு (Solopreneurs) இப்பயிற்சி மிகவும் பொருத்தமானதாகும். AI அடிப்படையிலான சொந்தத் தொழில் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்குவதற்கும், குறைவான செலவில் யோசனைகளைப் பரிசோதிப்பதற்கும் இது வழிகோலும். ஹேக்கத்தான் போட்டிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் லிங்க்ட்இன் தளங்களில் தங்களின் AI திறனை வெளிப்படுத்த விரும்புவோருக்கு இது சிறப்பான வாய்ப்பாக அமையும்.

தகுதிகள் மற்றும் பதிவு விவரங்கள்:

இப்பயிற்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சியும், அடிப்படை கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும். பங்கேற்பாளர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், வெளியூர் நபர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 8668100181 / 9360221280 ஆகிய எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai