Chennai Bike Race Arrest: சென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். இதற்காக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தாலும், தொர்ந்து இரவில் இளைஞர்கள் பைக் ரேஸில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை போலீசார் வெளியிட்ட அறிவிப்பின்படி, நேற்று (04.10.2026) அதிகாலை, சுமார் 15 முதல் 20 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனங்களில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே, பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான முறையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, மேற்படி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 16 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சாகசத்திற்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறைனரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் (Without Number Plates) இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் என்ற பெயரில் வீலீங் செய்து, சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
🔄UPDATE 🚔 வாகன சாகசத்திற்க்கு எதிரான தீவிர நடவடிக்கை | 🚔 STRICT ENFORCEMENT AGAINST DANGEROUS VEHICLE STUNTS ⚠️ ஆபத்தான முறையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து, 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். 🚨இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில், பதிவு எண் பலகையின்றி இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 👮♂️ தீவிர கண்காணிப்பும் சட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ⚠️ 3 cases were registered and 16 persons were arrested for engaging in dangerous two-wheeler stunts. 11 two-wheelers used for the stunts were seized from them. 🚨 Following this, during an intensive vehicle enforcement drive, 56 two-wheelers being driven without registration number plates were seized. 👮♂️ Intensive surveillance and enforcement action continue to be carried out. #ChennaiPolice #ChennaiTraffic #TrafficEnforcement #RoadSafety #SafeChennai #Swiftaction #Police
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 5, 2026
பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100, Kaaval Uthavi App மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து புகார் எண்: 90031 30103 (WhatsApp) மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.