• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! தடபுடலாக தயாராகும் 3 விளையாட்டு மைதானங்கள்

சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! தடபுடலாக தயாராகும் 3 விளையாட்டு மைதானங்கள்

சென்னையில் 3 விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த தமிழக அரசு இ-டெண்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 22, 2026, 07:59 IST|Updated: Nov 22, 2026, 08:24 IST
joinshare
சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! தடபுடலாக தயாராகும் 3 விளையாட்டு மைதானங்கள்
Image Credit: Chennai latest news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னையில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சார்பில், சென்னையின் 3 முக்கியப் பகுதிகளில் விளையாட்டு வசதிகள் மற்றும் அதனுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | மண்ணின் மகள் திட்டம்: விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை மானியம்! விண்ணப்பிப்பது எப்படி?

இந்த அறிவிப்பின்படி, முதல் பணியாக சென்னை செனாய் நகரில் உள்ள கிரசண்ட் ரோடு விளையாட்டு மைதானத்தில் நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.85,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செனாய் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.  

இரண்டாவது பணியாக, சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் அமைந்துள்ள அல்போன்சா மைதானத்தில் விளையாட்டு வசதிகள் மற்றும் அதனுடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிக்கான முன்வைப்புத் தொகை ரூ.1,43,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாவது பணியாக சென்னை அடையாறு கனால் பேங்க் சாலையில் அமைந்துள்ள காந்தி நகர் பூங்காவில் நவீன விளையாட்டு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.1,38,000 ஆகும்.  

இந்த மூன்று இடங்களிலும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான ஆன்லைன் டெண்டர்களை சமர்ப்பிக்க 10.12.2026 அன்று பிற்பகல் 3.00 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப ஏலங்கள் 11.12.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு திறக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழுமையான டெண்டர் விவரங்கள் மற்றும் கூடுதல் அறிவிப்புகள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், சென்னையின் முக்கியக் குடியிருப்புப் பகுதிகளான செனாய் நகர், மந்தைவெளிப்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் உள்ள மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் புதிய பொலிவு பெற உள்ளன. இதன் வாயிலாக அப்பகுதி குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai